இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறு

கொரோனா நோயாளியை காப்பாற்ற திருமணத்தை தள்ளி வைத்த டாக்டர் ஷீபா ? இஸ்லாமிய பெண்ணின் தியாகம் ?

advertisement by google


எனக்கு இப்போ கல்யாணமா அவசியம்.. எப்பன்னாலும் பண்ணிக்கலாம்.. ஆனால் உசுரு.. ஷிபாவுக்கு ராயல் சல்யூட்!

advertisement by google

திருவனந்தபுரம்: “எனக்கு இப்போ கல்யாணமா முக்கியம்.. இன்னொரு நாளில்கூட கல்யாணம் பண்ணிக்கலாம்.. கொரோனா வார்டில் உள்ளவர்களை நான் முதலில் காப்பாற்ற வேண்டும்.. என்னால் ஆன சேவையை செய்ய வேண்டும்” என்று டாக்டர் ஷிபா கூறுகிறார்.. தன்னுடைய கல்யாணத்தையே கொரோனா பாதித்தவர்களுக்காக தள்ளி வைத்த ஷிபாவை பொதுமக்கள் அனைவருமே பாராட்டி வருகின்றனர்.

advertisement by google

கொரோனாவைரஸ் கடுமையாக தாக்க தொடங்கியதில் இருந்தே டாக்டர்களின் சேவை அளப்பரியது.. நர்ஸ்களும், மருத்துவ ஊழியர்களும் தங்கள் சொந்த பந்தங்களை மறந்து ஆஸ்பத்திரியே கதி என்று விழுந்து கிடக்கின்றனர்.

advertisement by google

இரவு, பகல் பாராமல் இவர்கள் செய்யும் சேவை உலக மக்களை வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தி வருகிறது.. ஒட்டுமொத்த மருத்துவ துறையும் தங்களது குடும்பம், சுக துக்கத்தை மறந்து கொரோனா பாதித்த மக்களுக்கு அயராமல் பாடுபட்டு வருகின்றனர்.
இப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஷிபா.. கேரள மாநிலத்தில் கண்ணூர் பகுதியில் உள்ள பரியரம் ஆஸ்பத்திரியில் டாக்டராக உள்ளார்.. அறுவை சிகிச்சை மருத்துவர் என்பதால் கூடுதல் பொறுப்பு.. கடந்த மார்ச் 29-ம் தேதி இவருக்கு கல்யாணம் நிச்சயம் ஆனது.

advertisement by google

துபாயை சேர்ந்த அனுஸ் முகமது என்ற தொழிலதிபர்தான் மாப்பிள்ளை.. இரு வீட்டிலும் பெரியோர்கள் நிச்சயித்து மும்முர ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர்… ஆனால் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்று ஷிபா சொல்லிவிட்டார்.. காரணம் ஷிபா பணிபுரியும் ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றுக்கான தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் நிறைய அமைக்கப்பட்டுள்ளன.. ஏராளமான நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் குழுவில் ஷிபாவும் ஒருவர்!!
ஓடியாடி நோயாளிகளுக்கு ஷிபா சிகிச்சை அளிக்கும்போதுதான் அவரது திருமண விஷயம் மருத்துவமனை நிர்வாகத்துக்கு தெரிய வந்தது.. அதனால் சில நாட்கள் லீவும் தரவும் முன் வந்தது.. ஆஸ்பத்திரியே லீவு தந்தும் ஷிபா மறுத்துவிட்டார்.. “இப்போ இல்லன்னாலும் எப்ப வேணும்னாலும் கல்யாணம் செய்துக்கலாம்.. இன்னொரு நாளுக்கு தள்ளி வைக்கிறதுல எந்த பிரச்சனையும் இல்லை.. ஆனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது.

advertisement by google

என் கடமையை முடிஞ்ச அளவு என்னால செய்யணும்ன்னு நினைக்கிறேன்.. அதனால் லீவு வேணாம்.. என்னுடைய இந்த முடிவை என் வீட்டிலும், மாப்பிள்ளை வீட்டிலும் சொன்னேன்.. அவர்கள் நிலைமையை புரிஞ்சிக்கிட்டாங்க.. மறுப்பு சொல்லல.. கேரளத்தின் சூழ்நிலையை நன்றாக அவர்கள் உணர்ந்து, என்னுடைய எண்ணத்தையும் புரிஞ்சிக்கிட்டு நம்பிக்கையை தந்துட்டு வர்றாங்க” என்றார்.
ஷிபாவின் இந்த உயரிய குணம்தான் பெருமளவில் பேசப்பட்டு வருகிறது.. இதில் இன்னொரு ஸ்பெஷலும் உள்ளது… ஷிபாவின் அக்காவும் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தந்து வருகிறாராம்.. கல்யாணத்தை தள்ளி போட்டதை பற்றி ஷிபாவிடம் கேட்டதற்கு “ஒரு டாக்டரா எங்கள் கடமையை செய்றோம்.. இந்த தொற்றில் இருந்து கேரளத்தை மீட்க வேண்டும்.. இதுதான் இப்போது என் எண்ணம்” என்கிறார்.
3 வாரத்துக்கு முன்பு வரை இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்படைந்த மாநிலங்களில் கேரளா 2வது இடத்தில் இருந்தது… இப்போது 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது என்றால் அதற்கு இதுபோன்ற உயரிய மனம் கொண்ட டாக்டர்களின் சேவையே முக்கிய காரணம்! இன்று மட்டுமல்ல.. காலங்காலமாக கடவுளுக்கு அடுத்ததாக கையெடுத்து கும்பிடகூடிய அளவுக்கு போற்றப்படுவதற்கு காரணமும் இதுபோன்ற ஷிபாக்கள்தான்!!

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button