இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்

உலகநாடுகள் ஒன்றிணைந்தால் கொரோனாவை அழிக்கமுடியும் -ஐநா சபை?

advertisement by google

✍️⚡உலக நாடுகள் ஒன்றிணைந்தால் கொரோனாவை அழிக்க முடியும்: ஐ.நா.,

advertisement by google

நியூயார்க்: ‘இரண்டாம் உலகப்போருக்குப் பின், இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால், இந்த கொரோனா வைரஸ் தொற்று.

advertisement by google

உலக நாடுகள் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை அழிக்க முடியும்’ என, ஐ.நா., பொதுச் செயலர் எச்சரித்துள்ளார்.

advertisement by google

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படக்கூடிய, உலகளாவிய சமூக பொருளாதார தாக்கம் குறித்து, நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமை அலுவலகத்தில் -ஐ.நா., பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரஸ் அறிக்கையை வெளியிட்டு பேசியதாவது:

advertisement by google

கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 8.51 லட்சமாக உயர்ந்துள்ளது; 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

advertisement by google

இந்த வைரசால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில், கடந்த, 24 மணி நேரத்தில், 849 மரணங்கள் பதிவாகியுள்ளன. பிரிட்டனில், மார்ச் 30ம் தேதி மட்டும் 381 பேர் உயிரிழந்துள்ளனர்.

advertisement by google

இதனால் அங்கு மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 1,789ஆக உயர்ந்துள்ளது.

advertisement by google

முதன் முதலில் சீனாவில் பரவத் துவங்கிய இந்த வைரசால், அமெரிக்காவில் இதுவரை, 3,600க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இது சீனாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளைவிட அதிகமானது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள்படி, அமெரிக்காவில், 1.81 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தெரியவருகிறது.

இதனால், நான்கில் ஒரு அமெரிக்கர் ஏதேனும் ஒரு வகையில், கொரோனா தொற்றால் முடக்கப்பட்டுள்ளார். அப்படி இல்லையெனில் ஓரிரு வாரத்தில் முடக்கப்படுவார்.

-காவு வாங்கும் கொரோனா

ஐ.நா., தொடங்கப்பட்டதில் இருந்து, நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக கொரோனா வைரஸ் தொற்று உள்ளது.

இது, மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களையும் காவு வாங்கி வருகிறது.

உலகளவில் இந்த வைரஸ் தொற்றால், 2.5 கோடி பேர் வேலையிழப்பார்கள்.

உலகளாவிய அந்நிய நேரடி முதலீடுகள், 40 சதவீதம் வரை கீழ்நோக்கி செல்ல வாய்ப்புள்ளது.

-வல்லரசுகள் உதவ வேண்டும்!

இரண்டாம் உலகப்போருக்குப் பின், இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால், இந்த கொரோனா வைரஸ் தொற்று.

இத்தொற்றைக் கட்டுப்படுத்த, அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து சுகாதார நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

அப்போதே இந்த நோய்த் தொற்று பரவலுக்கு, ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
வளர்ந்த நாடுகள், மற்ற நாடுகளுக்கு உதவ வேண்டும்.

அப்படி இல்லையென்றால், இந்த வைரஸ் தொற்று காட்டுத்தீ போல் மேலும் பரவும். இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

advertisement by google

Related Articles

Back to top button