இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்

தமிழகத்தில் கொரானா கட்டுபடுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லாமல் முதலமைச்சர்பாதுகாப்பு? அமைச்சர் கடம்பூர் ராஜீ பெருமிதம் ?

advertisement by google

ஒத்துழையாமை இயக்கம் நடத்தி சுதந்திரம் பெற்றதைப் போல தற்போது மக்கள் ஒத்துழைப்பு வழங்கி கொரோனா வைரஸை விரட்ட வேண்டும் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு

advertisement by google

கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் கொரோனா தாக்கம் சிறிதளவு கூட இருக்க கூடாது மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தினமும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு ஆய்வு கூட்டங்கள், மாவட்ட ஆட்சியருடன் காணொலியில் கலந்துரையாடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.இதனால் தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை,வெளி மாநிலங்களில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 4710 தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு தேவையான உணவு பொருள்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.அதே போன்று வெளிமாநிலத்தில் இருந்து வந்த 2100 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்று ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பியதில் 29 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று முடிவுகள் வந்துள்ளது. இன்னும் ஒருவருக்கு மட்டும் முடிவு வரவேண்டியது உள்ளது. நாளை மறுநாள் மக்களுக்கு ரூ 1000 மற்றும் ரேசன் பொருள்கள் வழங்கப்பட உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், ஆதரவற்றவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பணம் மற்றும் பொருள்களை நேரில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்கள் வாங்க மட்டும் மக்கள் வெளியே வர வேண்டும்,ஒவ்வொரு இந்திய குடிமகனும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மற்றும் தமிழக முதல்வரும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பாதிக்கப்பட்ட அம்சங்களை அரசே வழங்கினாலும் கூட அரசு மக்களிடம் கேட்பது ஒத்துழைப்பு தான்? 21 நாள் ஊரடங்கு உத்திரவினை மக்கள் கடைபிடித்தால் இந்தியா பாதுகாப்பான நாடாக திகழும்,ஒத்துழையாமை இயக்கம் நடத்தி இந்தியா சுதந்திரம் பெற்றது போன்று ஒத்துழைப்பு இயக்கம் நடத்தி நாட்டையும், வீட்டையும் காக்க வேண்டும்,மக்கள் அச்சப்பட தேவையில்லை, தூத்துக்குடி, கோவில்பட்டி அரசு மருத்துவமனையிகளில் தலா 150 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தபட்ட வார்டுகள் உள்ளன.மாவட்டம் முழுவதும் 510 படுக்கைகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவின்போது மக்கள் வெளியே செல்ல முடியாத நிலையில் பணம் செலுத்தவில்லை என்பதால் கேபிள் டிவி இணைப்பை துண்டித்த பணியாளர்களைத்தான் காவல் துறை தடுத்துள்ளதே தவிர, கேபிள் டிவியில் பணிபுரியும் தொழிலாளர்களை காவல் துறை தடுக்கவில்லை.பொது மக்கள் மற்றும் பால்முகவர்கள் கோரிக்கையை ஏற்று மாலை 3.30 மணி முதல் 5 மணி வரை பால் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவில்பட்டி நகரில் மக்கள் கூட்டத்தினை தவிர்க்கும் வகையில் 2 அல்லது 3 இடங்களில் கூடுதலாக தினசரி சந்தை நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மொபைல் வண்டி மூலமாக மக்களுக்கு நேரிடையாக காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று 3 வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், 12 வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும், 3 வார்டுகளுக்கு ஒரு வாகனம் என்று பயன்படுத்தபட உள்ளதாகவும்,கொரோனா குறித்த விழிப்புணர்வினை செய்தியாளர்கள், ஊடகத்துறையினர் தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும் என்றார்.

advertisement by google

ஊரடங்கு உத்தரவின்போது மக்கள் வெளியே செல்ல முடியாத நிலையில் பணம் செலுத்தவில்லை என்பதால் கேபிள் டிவி இணைப்பை துண்டித்த பணியாளர்களைத்தான் காவல் துறை தடுத்துள்ளதே தவிர, கேபிள் டிவியில் பணிபுரியும் தொழிலாளர்களை காவல் துறை தடுக்கவில்லை.கோவில்பட்டியில் கூடுதலாக 2 அல்லது 3 இடங்களில் தினசரி காய்னி சந்தை அமைக்கப்படவுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றி காய்கனிகள் கிடைக்க 3 நடமாடும் காய்கனி விற்பனை வாகனம் செயல்படுகிறது. மேலும், 9 வாகனங்கள் விரைவில் செயல்பட தொடங்கும்.பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். ஒத்துழையாமை இயக்கம் நடத்தி சுதந்திரம் பெற்றதைப் போல தற்போது மக்கள் ஒத்துழைப்பு வழங்கி கரோனா வைரஸை விரட்ட வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதுகாப்பு நடவடிக்கைக்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு கே.ஆர். நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாசலம் ரூ.10 லட்சம் மதிப்பிலான காசோலை, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினரும், தொழிலதிபருமான சந்திரசேகர் ரூ.1 லட்சம் மதிப்பிலான காசோலை மற்றும் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோயில் முன்னாள் அறங்காவலர் குழு மற்றும் திருப்பணிக் குழுத் தலைவர் நாகஜோதி ரூ.1 லட்சம் மதிப்பிலான காசோலையை அமைச்சர் கடம்பூர் செ.ராஜுவிடம் வழங்கினர்.

advertisement by google

அப்போது, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்பாலகோபாலன், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button