கொரனா குறித்த வதந்திகளும் ?உண்மையான விளக்கமும்- விண்மீன்நியூஸ்
✍️எல்லாத்தையும் நம்பாதீங்க!! – கொரோனா வதந்திகளும்…விளக்கமும்!
கொரோனா வைரஸ் பரவலை விட அதைக் குறித்த வதந்திகள் உலகம் முழுவதும் அதிவேகமாக, பரவி வருகின்றன.
அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
1.வதந்தி: வெப்பமான, ஈரப்பதமான இடத்தில் கொரோனா பரவாது
விளக்கம்: எல்லா பகுதியிலும் கொரோனா பரவும்
2.வதந்தி: குளிர் கொரோனாவை கொல்லும்
விளக்கம்: குளிர்பிரதேசங்களையும் கொரோனா தாக்கியுள்ளது
3.வதந்தி: வெந்நீரில் குளிப்பது கொரோனாவை கொல்லும்
விளக்கம்: இல்லை.அதீத சூடு தோலை பாதிக்கும்
4.வதந்தி: கொசு மூலம் கொரோனா பரவும்
விளக்கம்: கொசுவால் பரவாது. தும்மல், இருமல் மூலமே பரவும்
5.வதந்தி: ஹேண்ட் ட்ரையர் கொரோனாவை கொல்லும்
விளக்கம்: இல்லை. ஹேண்ட் ட்ரையர் கைகளை உலர்த்த மட்டுமே உதவும்
6.வதந்தி: புற ஊதா கதிர் விளக்குகள் கொரோனாவை கொல்லும்
விளக்கம்: புற ஊதா கதிர் விளக்குகள் உடலுக்கு தீங்கானவை
- வதந்தி: தெர்மல் ஸ்கேனர் மூலம் கொரோனாவை கண்டுபிடிக்கலாம்
விளக்கம்: தெர்மல் ஸ்கேனர் மூலம் உடலின் வெப்பநிலையை மட்டுமே அறிய முடியும்
8.வதந்தி: கொரோனாவை தடுக்க உடலில் ஆல்கஹால்,குளோரின் தெளித்துக்கொள்ளலாம்
விளக்கம்: கூடாது.ஆல்கஹால்,குளோரின் கண்களில் பட்டால் ஆபத்து
9.வதந்தி: நிமோனியா தடுப்பூசி கொரோனாவிலிருந்து காக்கும்
விளக்கம்: இல்லை. இதுவரை கொரோனாவுக்கு எந்த தடுப்பூசியும் இல்லை
- வதந்தி: பூண்டு சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பாதிக்காது
விளக்கம்: உறுதிப்படுத்தப்படவில்லை. பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
11.வதந்தி: கொரோனா வயதானவர்களை மட்டுமே தாக்கும்
விளக்கம்: அனைத்து வயதினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
12.வதந்தி: ஆண்டிபயாக்டிக் மருந்துகள் கொரோனாவை எதிர்க்கும்
விளக்கம்: கொரோனா ஒரு வரைஸ். பாக்டிரியா தடுப்பு மருந்து உதவாது
13.வதந்தி: கொரோனாவை குணப்படுத்த தனி மருந்து உண்டு
விளக்கம்: இதுவரை கொரோனாவை குணப்படுத்த தனி மருந்து இல்லை