இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

நான் கூட விமானத்தில் ஹைகிளாசில் போனதில்லை, அந்த நபர் போறார் எச்.ராஜா வயித்தெறிச்சல் ட்வீட்? டெட்டிசன்கள் கேள்வி கணை?

advertisement by google

ஜே. கிளாஸில் போனது யாரு.. யார் அந்த காம்ரேட்.. யாரை மனதில் கொண்டு டிவீட் போட்டார் எச். ராஜா..?

advertisement by google

சென்னை: “நான்கூட ஃபிளைட்டில் ஹைகிளாசில் போனது இல்லை.. ஆனால் அந்த காம்ரேட் J கிளாசில் பயணம் செய்கிறார் என்று எச்.ராஜா ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. இதையடுத்து அந்த தலைவர் யார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியதற்கு “நியூஸ் ஜெ பாருங்கள்” என்று பதில் தெரிவித்துள்ளார் எச்.ராஜா!

advertisement by google

பாஜக தேசிய செயலாளரும், மூத்த தலைவருமான எச்.ராஜா ஒரு ட்வீட் போட்டுள்ளார்… அதில், “பெயர் சொல்ல விரும்பவில்லை. நான் இன்று வரை விமானத்தில் J கிளாசில் போனதில்லை. ஆனால் தங்களை காம்ரேட் என்றும் தொழிலாளிகள் துணைவன் என்றும் கூறிக்கொண்டு J கிளாசில் நான் சென்ற அதே விமானத்தில் பயணித்த நபர்கள் இன்று தொலைக்காட்சியில் பாடம் எடுக்கின்றனர்” என்று பதிவிட்டார்.

advertisement by google

எச்.ராஜா இப்படி ஒரு பதிவு போடவும், யார் அந்த கம்யூனிஸ்ட் தலைவர் என ட்விட்டர்வாசிகள் மண்டையை பிய்த்து கொண்டனர். அதனால் எச்.ராஜாவிடமே இந்த சந்தேகத்தை கேட்க ஆரம்பித்தனர். “உங்களிடம் உண்மை இருந்தால் வெளிப்படையாக சொல்லுங்கள். இல்லையேல் அது குறித்து பேசவேண்டாம். தலைமைக்கு அழகு தைரியம்.” என்று கேள்வி எழுப்பவும் நியூஸ் ஜெ.பாருங்கள் என்று அதற்கு பதில் ட்வீட் போட்டுள்ளார் எச்.ராஜா. ஆனால் அந்த தலைவர் யார் என்று பெயர் சொல்லவே இல்லை.
இதையடுத்து திரும்பவும் குழம்பி போன ட்விட்டர்வாசிகள் அந்த கம்யூனிஸ்ட் தலைவர் யார் என்பதை விட்டுவிட்டு, எச்.ராஜாவின் ட்வீட்டுக்கு கமெண்ட் போட்டு வருகின்றனர். “News j பார்ப்பதற்க்கு நீங்களே சொல்லுங்களேன் Please” என்றும், “ஏன் சார் எளிமை பற்றியும் டீ கடையில் வேலை செய்து கடின உழைப்பால் முன்னேறியதாக சொல்லும் நம்ம பிரதமர் பல லட்சங்களில் ஆடை அணிகிறாரே அதை பற்றியும் பேசுவீர்கள் தானே” என்று ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
இன்னொருவர் நான் “சுத்தி வளைச்சு பேச விரும்பல..கம்யூனிஸ்ட் கட்சிகாரன்லாம் J கிளாஸ்ல போறானுங்க…ஒரு ஆளுங்கட்சியோட தேசிய செயலாளர்..எனக்கு இப்போ வரைக்கும் லோக்கல் டிக்கெட்டு…கட்சி நடத்துறியா இல்ல கட்டஞ்சாயா கடை நடத்துறியா” என்று வஞ்சப்புகழ்ச்சியாக மீம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். பெரும்பாலானோர் யார் அவர்? என்று கேட்டு வருகின்றனர்.

advertisement by google

ஆனால் அதற்குள் எச்.ராஜா காங்கிரஸ்தொடர்பான ஒரு ட்வீட்டை பதிவிட்டார். அதில், “விஜய் மல்லையா, நிரவ் மோடி, சோக்சி, இவர்கள் கடன் பெற்றது காங்கிரஸ் ஆட்சியில். மோடி அரசின் கடுமையான நடவடிக்கைகளால் இந்தியா திரும்ப முடியவில்லை. மேலும் அனில் அம்பானி படும் நாடு உலகறியும். மேலும் கடந்த 6 ஆண்டுகளில் மத்திய அரசு 3 லட்சம் கோடிக்கு மேல் வராக் கடனை வசூலித்துள்ளது”என்று பதிவிட்டார்.

advertisement by google

இதையும் ட்விட்டர்வாசிகள் விடவில்லை.. “அப்புறமா அவ்வளவு கஷ்டப்படும் அனில் அம்பானிக்கு எப்படி எதன் அடிப்படையில் டீல் தூக்கி கொடுத்தீங்க?” என்றும், “மல்லைய்யாவுக்கும் நீரவ்மோடிக்கும் டிக்கெட் எடுத்து கொடுத்து நிரந்தரமாக வெளிநாட்டுக்கு தேனிலவுக்கு அனுப்பி வைத்தது யாரு” என்றும் துளைத்தெடுத்து வருகின்றனர்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button