நண்பகல்நேர விரிவான செய்திகள் ?தமிழ்நாடு ?இந்தியா ?உலகம்
????விண்மீண்தீநியூஸ்? ???: ?⚪நர்சிங் உள்ளிட்ட 22 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கியது.
இன்றைய கலந்தாய்வில் பங்கேற்க 1,223 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
உரிய ஆவணங்களுடன் பங்கேற்க அறிவுறுத்தல்.
[9/10, 3:22 PM] விண்மீண்தீநியூஸ்: ?⚪#Breaking :
விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிக்கிறோம் – இஸ்ரோ
விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை சந்திரயான் 2 விண்கலம் கண்டுபிடித்துள்ளது – இஸ்ரோ
விக்ரம் லேண்டருடன் இதுவரை தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை – இஸ்ரோ
[9/10, 3:22 PM] விண்மீண்தீநியூஸ்: ?⚪ இந்திய ஊடகத்துறை தற்போது நெருக்கடியில் உள்ளது ; இது தற்செயலாக ஏற்பட்டதல்ல
ஊடகத்துறைக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி குறித்து ஆய்வு செய்யவேண்டியது அவசியம்
ஆசியாவின் நோபல் பரிசு என்றழைக்கப்படும் மகசேசே விருது பெற்ற இந்திய ஊடகவியலாளர் ரஷீஷ்குமார் கருத்து
[9/10, 3:22 PM] விண்மீண்தீநியூஸ்: ?⚪ஓணம் பண்டிகையை கொண்டாடும் மலையாள மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பண்டிகை திருநாள் வாழ்த்து.
அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றை பின்பற்றி, மக்கள் அனைவரும் சாதி, மத, பேதங்களை களைந்து, ஒற்றுமையாக வாழ வேண்டும் என வாழ்த்து.
[9/10, 3:22 PM] விண்மீண்தீநியூஸ்: ?⚪சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு 20 படுக்கைகளும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 40 படுக்கைகளும் உள்ளது.
[9/10, 3:23 PM] விண்மீண்தீநியூஸ்: ? நேரலை செய்திகள்
?மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு, வினாடிக்கு 75 ஆயிரம் கன அடியில் இருந்து, 70 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
[9/10, 3:23 PM] விண்மீண்தீநியூஸ்: ? நேரலை செய்திகள்
?பெட்ரோலிய குழாய் இணைப்பு.
?தெற்காசியாவின் முதல் எல்லை தாண்டிய பெட்ரோலிய குழாய் இணைப்பு தொடங்கப்பட்டது.
?பிரதமர் மோடி, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒளியுடன் இணைந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
[9/10, 3:23 PM] விண்மீண்தீநியூஸ்: ®®இதுவரைஇன்று14 நாட்கள் வெளிநாட்டுப் பயணத்திற்குப் பிறகு சென்னை திரும்பினார் முதல்வர் பழனிச்சாமி
தலைமை நீதிபதி பணியிட மாற்றத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம்
காஷ்மீரில் முகரம் பண்டிகையையொட்டி மீண்டும் தடை உத்தரவு அமல்
®®ஊடகதளம்
[9/10, 3:23 PM] விண்மீண்தீநியூஸ்: ®®சந்திரயான்- 2 விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு – தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ தீவிர முயற்சி
சந்திரயான்- 2 விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்து கிடக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆர்பிட்டர் உதவியுடன் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளது.
விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ள செய்தியில், விக்ரம் லேண்டர் ஆபத்தான இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
®®ஊடகதளம்
[9/10, 3:23 PM] விண்மீண்தீநியூஸ்: ®®டெல்லியில் சோனியா காந்தியுடன், சரத்பவார் சந்திப்பு.
®®மகாராஷ்டிரா சட்டப்பேரவை தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை.
®®ஊடகதளம்
[9/10, 3:23 PM] விண்மீண்தீநியூஸ்: ®®22 துணை மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடக்கம்
நர்சிங் உள்ளிட்ட 22 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது.
பி.எஸ்.சி. நர்சிங்,ரேடியோ கிராபி & இமேஜிங் டெக்னாலஜி, கார்டியோ பல்மனரி, மெடிக்கல் லேபரட்டரி, ஆபரேஷன் & அனஸ்தீஷியா டெக்னாலஜி உள்ளிட்ட 22 துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 9 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற்றது.
மொத்தம் 22 ஆயிரத்து 155 பேர் விண்ணப்பித்த நிலையில் அவர்களுக்கன தரவரிசைப்பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இன்று கலந்தாய்வு தொடங்கியுள்ளது.
முதல்நாளான இன்று, காலை 9.30 மணி முதல் 12 மணி வரை சிறப்புப்பிரிவினருக்கான கலந்தாய்வும், பிற்பகலில், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது.
இன்றைய கலந்தாய்வுக்கு 1,223 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.கலந்தாய்வுக்கு வருவோர் கல்வி, வருவாய், இருப்பிடச் சான்றுகளை எடுத்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வரும் 25-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.
®®ஊடகதளம்
[9/10, 3:23 PM] விண்மீண்தீநியூஸ்: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•
தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பை சேர்ந்த நபர் ஒருவர் சென்னையில் கைது
சென்னையில் கட்டுமான தொழிலாளர் என்ற போர்வையில் பதுங்கியிருந்த, மேற்குவங்கத்தை சேர்ந்த அஷதுல்லா ஷேக் (35) என்ற ராஜாவை கைது செய்தது மேற்குவங்க போலீஸ்
•┈┈• ❀ ? ?news ?❀ •┈┈•
[9/10, 3:23 PM] விண்மீண்தீநியூஸ்: •┈┈•❀ ? breaking news ❀ •┈┈•
அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு
மத்திய அரசின் 100 நாள் சாதனை குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
•┈┈• ❀ ? breaking news ❀ •┈┈•
[9/10, 3:23 PM] விண்மீண்தீநியூஸ்: ?⚪விளம்பரம் அவசியமில்லை :
சிறுபான்மை கல்லூரியில் ஆசிரியர் அல்லாத பணியை நிரப்புவது தொடர்பாக விளம்பரங்கள் வெளியிட அவசியமில்லை
கோவை சிறுபான்மை கல்லூரியில் பணியமர்த்தப்பட்ட 7 பேரின் நியமனத்திற்கு ஒப்புதல்தர மறுத்த இயக்குனரின் உத்தரவு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்.
[9/10, 3:23 PM] விண்மீண்தீநியூஸ்: ?⚪ ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு :
பிரசித்திபெற்ற ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு நாளை புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.
[9/10, 3:23 PM] விண்மீண்தீநியூஸ்: ?⚪தேர்வு முடிவு வெளியிட தடை :
தேர்வு நடத்தப்படும் மொழி குறிப்பிடாத நிலையில் ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வை செல்லாது என அறிவிக்கக்கோரிய மனு
தமிழகத்தில் கணினி ஆசிரியருக்கான தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம்
[9/10, 3:23 PM] விண்மீண்தீநியூஸ்: ?⚪அரசுப்பள்ளி மூடல், மாணவர்கள் தவிப்பு :
தேனி, ஆண்டிபட்டி பசுமலைதேரியில் முன்னறிவிப்பின்றி அரசுப்பள்ளியை மூடியதால் மாணவர்கள் தவிப்பு.
மூடிய பள்ளியை மீண்டும் திறக்க வலியுறுத்தி மாணவர்களும், பெற்றோர்களும் மாவட்ட ஆட்சியரிடம் மனு
[9/10, 3:23 PM] விண்மீண்தீநியூஸ்: ?⚪சி.பி.எஸ்.இ ஆசிரியர் தகுதி தேர்வு :
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு எனப்படும் சிடெட் தேர்வு டிசம்பர் 8ம் தேதி நாடு முழுவதும் 110 நகரங்களில் நடைபெறுகிறது.
சிடெட் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு செப்டம்பர் 18ம் தேதி வரை நடைபெறும் : சி.பி.எஸ்.இ
[9/10, 3:23 PM] விண்மீண்தீநியூஸ்: ?⚪ஹரியானாவில் பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டி :
ஹரியானா சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும்.
காங்கிரஸ் உட்பட எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை – அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சதீஷ் சந்திர மிஸ்ரா.
[9/10, 3:23 PM] விண்மீண்தீநியூஸ்: ?⚪இணையதள சேவைகள் முடக்கம் :
மொகரம் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு பாகிஸ்தானில் இணைய தள சேவைகள் முடக்கம்.
[9/10, 3:23 PM] விண்மீண்தீநியூஸ்: ?⚪ சென்னையில் இரண்டே மாதத்தில் சுமார் 28 லட்சம் போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்கு பதிவு.
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை படம்பிடிக்கும் தானியங்கி கேமரா மூலம் சுமார் 28 லட்சம் வழக்கு பதிவு.
நவீன கேமராக்கள் மூலம் தற்போது வரை சுமார் 8,300 வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ்.
சென்னை அண்ணா நகரில் ஜூலை மாத இறுதியில் 58 நவீன ANPR கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்.
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை இந்த கேமராக்கள் படம்பிடித்து வருகின்றன.
அதிகபட்சமாக ஒரே நாளில் சென்னை அண்ணா நகரில் 63 ஆயிரம் வழக்குகள் பதிவு.
[9/10, 3:23 PM] விண்மீண்தீநியூஸ்: ?⚪மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 70,900 கனஅடியில் இருந்து 75,900 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.74 அடியும், அணையின் நீர் இருப்பு 94.654 டி.எம்.சி.யாகவும், அணையின் நீர்மட்டம் 65,000 கனஅடியாக உள்ளது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 65,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
[9/10, 3:23 PM] விண்மீண்தீநியூஸ்: ?⚪ வேலூர்: காட்பாடி ரயில் நிலையம் அருகே குடிநீர் ரயிலும், பயணிகள் ரயிலும் ஒரே தண்டவாளத்தில் வந்ததால் பரபரப்பு.
நேருக்கு நேர் வந்த 2 ரயில்களும் 100 மீட்டர் தூரத்தில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு.??