இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பக்தி

உலகிலேயேமூன்று கால் சித்தர் – சிவன், சிவசக்தி திருவானைக்கால் கோவில் வரலாறு?

advertisement by google

❤❤❤❤❤❤❤❤❤
மூன்று கால் சித்தர்
❤❤❤❤❤❤❤❤❤

advertisement by google

உலகிலேயே மூன்று கால்களை உடைய முனிவர் என்று போற்றப்படும் சிறப்பு வாய்ந்த பிருங்கிரிஷி சிவபெருமானை தவிர பிற தெய்வத்தை வழிபடக்கூடாது என்கிற கொள்கை கொண்டவர்.

advertisement by google

இவர் நாள்தோறும் சிவனை மட்டும் வழிபட்டு வந்தார். அருகில் உள்ள அம்பாளை கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை.

advertisement by google

இதைக்கண்ட சக்தி சிவனிடம் முறையிட்டாள்.

advertisement by google

நாம் ஒரே உருவமாய் நிற்போம் என்று கூறி அம்மையப்பனாய் நின்றனர்.

advertisement by google

அன்று பூஜைக்கு வந்த பிருங்கிரிஷி அம்மையும் அப்பனும் ஓர்உருவாய் இருப்பதைக் கண்டு யோசித்து பின்னர் வண்டு உரு எடுத்து அம்மையப்பரின் தொப்புள் வழியே துளையிட்டு சிவனை மட்டும் வலம் வந்தார்.

advertisement by google

இதைகண்ட சினம் உற்ற அம்மை பிருங்கியின் உடற்பாகத்தில் உள்ள தனது கூறாகிய சக்தியை நீக்கினாள்.

advertisement by google

அதனால் வலிமை இழந்த பிருங்கி தடுமாறினார்.

உடனே சிவ பெருமான் வலிமையுள்ள மூன்றாவது கால் ஒன்றை கொடுத்து அருளினார் .

அருளியதோடு முனிவரே சக்தியில்லையேல் சிவன் இல்லை என்பதை உணர்ந்திர்ப்பாய்.
சிவசக்தி வழிபாடே சிறந்தது என்பதை புரிந்து கொள் என்றார்.

பிரிங்கியும் அப்பனே. என்னை அறியாது நான் செய்த இத்தவறுகளை மன்னித்தருள்வாய் என்றும் பராசக்தியிடம் மன்னிப்பும் கோரினார்.

அறியாமற்செய்த தவறை மன்னித்தேன் என அன்னையும் அருள் கூறினார்.

?????????
(திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் சிவலிங்க சன்னதிக்கு இடது புறம் அமைந்துள்ள வெளிப்பிரகாரத் தூண்களில் இந்த சிற்பம் உள்ளது)
?????????

advertisement by google

Related Articles

Back to top button