திருடுவதற்கு முன் பக்கத்து வீடுகளுக்கு பூட்டுபோட்டும், ஜன்னல்களுக்கு துணிபோட்டு மூடி திருடிய ,திருச்சியை அதிரவைத்த நூதண திருடர்கள்?
திருடுவதற்கு முன் பக்கத்து வீடுகளுக்கு பூட்டு, ஜன்னல்களுக்கு துணி போட்டு மூடிவிட்டு கொள்ளை – திருச்சியை அதிரவைத்த நூதன திருடன்
வடிவேலு இந்த படத்துல சொல்றாரே முதல் போட்டு திருட்டுன்னு… அந்த மாதிரி ஒரு சம்பவத்தை அரங்கேத்தி இருக்காங்க நம்ம திருச்சியில.
திருச்சி மாவட்டம் லால்குடி பக்கத்துல இருக்குற குமுளூர் மேலத்தெருவை சேர்ந்தவரு முருகன். சிற்பம் செதுக்கற வேலை பார்த்துட்டு வர்றாரு. இவருக்கு 2 மகன்கள்.
மூத்த மகன் பெங்களூருல வேலை பார்த்துட்டு வர்ற நிலையில 2வது மகன், பத்தாங்கிளாஸ் படிச்சுட்டு வர்றாரு.
கடந்த ஞாயித்துக்கிழமை தன்னோட சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிருக்காரு முருகன்.
ஆளு வீட்டுல இல்லன்னு தெரிஞ்சுக்கிட்ட கொள்ளை கும்பல், ஆட்டைய போடுறதுக்கு பலமா ஸ்கெட்ச் போட்டுருக்காங்க.
சம்பவத்தன்னிக்கு ஏரியாவுக்கு வந்த கொள்ளை கும்பல், முருகன் வீட்டை தவிர மற்ற வீடுகளுக்கு எல்லாம் வெளியே பூட்டு போட்டுருக்காங்க.
கதவுக்கு பூட்டு போட்டாச்சு ஓகே. ஆனா ஜன்னல் வழியா பார்த்தா மாட்டிக்குவோமேன்னு உஷாரான கொள்ளை கும்பல், கையில கிடைச்ச துணியை எல்லாம் எடுத்து பக்கத்து வீட்டு ஜன்னலை எல்லாம் மூடி வச்சுட்டு களத்துல இறங்கியிருக்காங்க.
முருகன் வீட்டு பீரோவுல இருந்த 15 பவுன் நகை, 75 ஆயிரம் ரூபாய் பணம்னு அள்ளிட்டு போன அந்த கும்பல் எதுக்கும் இருக்கட்டும்னு பக்கத்து வீட்டுக்காரரோட டூவீலரையும் எடுத்துட்டு கிளம்பியிருக்கு.
நகை, பணம்னு அள்ளிட்டு போனா கூட பரவாயில்லை..
முருகன் வீட்டுல இருந்த சர்ட்டிபிகேட்டுகளையும் எடுத்துட்டு போய் பக்கத்துல இருந்த கிணத்துல போட்டுட்டு போயிருக்காங்க. ஏதோ உள்குத்து விவகாரம் மாதிரி தான் இந்த கொள்ளை சம்பவம் நடந்துருக்குல்ல.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பா முருகன் கொடுத்த புகாரின் பேர்ல போலீசார் வழக்கு பதிவு செஞ்சு இப்படி புத்திசாலித்தனமா செயல்பட்ட திருடர்கள் யாருன்னு தேடிட்டு வர்றாங்க…