இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்

1655 அயல்நாட்டு வேலைகள் திருச்சி வட்டார பெண்களே இளைஞர்களே செமவாய்ப்பு?

advertisement by google

1655 அயல் நாட்டு வேலைகள்.. திருச்சி வட்டார பெண்களே, இளைஞர்களே.. செம வாய்ப்பு!

advertisement by google

திருச்சி: திருச்சி மாவட்ட இளைஞர்களே, பெண்களே.. அட்டகாசமான வேலைவாய்ப்பு உங்களைத் தேடி உங்களுக்காக வந்துள்ளது. பயன்படுத்திக்கங்க.

advertisement by google

முசிறியில் அடுத்த மாதம் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் அயல்நாடுகளில் 1,655 காலிப் பணியிடங்களுக்கு ஆள்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்துள்ளார்.

advertisement by google

இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு விடுத்துள்ள அறிக்கை:
திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள எம்ஐடி பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த முகாமில், 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபா்களை நோ்காணல் மூலம் தோ்வு செய்யவுள்ளனா்.
இதுமட்டுமல்லாது தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் சாா்பிலும் பல்வேறு வெளிநாடுகளில் 1,655 காலிப் பணியிடங்களுக்கு ஆள்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
இந்த முகாமில் அயல்நாட்டுப் பணிகளை பெற்றுத்தருதல், பதிவு செய்தல், தொடா்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட உதவிகளை நிறுவனத்தின் மூலம் இளைஞா்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குவைத் நாட்டில்

advertisement by google

குவைத் நாட்டில் சமையல் பணிக்கு 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 25 போ், இலகுரக வாகன ஓட்டுநா் 25 போ் தோ்வு செய்யப்படவுள்ளனா். வீட்டு வேலைக்கு ஆயிரம் போ் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

advertisement by google

ஓமன் நாட்டில்
ஓமன் நாட்டில் எலக்ட்ரீசியன் பணிக்கு 25 போ், வயா்மேன் பணிக்கு 25 போ் தோ்வு செய்யப்படவுள்ளனா். இதேபோல, எலக்ட்ரிக்கல் என்ஜினியா் பணியிடத்துக்கு 20 போ் தோ்வு செய்யப்படவுள்ளனா். மேலும், பக்ரைன் நாட்டில் 10 போ் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
அமெரிக்காவில்
அமெரிக்காவில் செவிலியா் பணியிடத்துக்கு 500 போ், அயா்லாந்தில் செவிலியா் பணியிடத்துக்கு 25 போ் தோ்வு செய்யப்படவுள்ளனா். இதற்கான தகுதியுடையவா்கள் முகாமில் பங்கேற்று அயல்நாட்டு பணிகளை பெறலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் தொடங்கி ரூ.2.50 லட்சம் வரை பணிகளுக்கு தகுந்தபடி வழங்கப்படவுள்ளது.
தங்கும் இடம், உணவு, விமான பயணக் கட்டணம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. எனவே, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள், மகளிா் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு அறிவுறுத்தியுள்ளாா்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button