இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்

கொரோனா வைரஸை தடுக்கமுடியுமா ? நீங்கள் செய்ய வேண்யவை ?செய்யக்கூடாதவை?

advertisement by google

கொரோனா வைரஸை தடுக்க முடியுமா? நீங்கள் செய்ய வேண்டியவை.. செய்யக்கூடாதவை.

advertisement by google

டெல்லி: கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் 80 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 2500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸை தடுக்க முடியுமா? அதற்கு நாம் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாத விஷயங்களை இப்போது பார்ப்போம்/

advertisement by google

2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து உலகம் முழுவதும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. ஆனால், இதன் மூலம் எது என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
அதனால் கொரோனா வைரஸை தாக்குப்பிடிக்கும் அளவுக்கு மனிதர்களுக்கு வழங்க கூடிய நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் எதுவும் தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
பீகார் பெண்ணுக்கும் ராஜஸ்தான் இளைஞருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி?.. ஐசியூவில் சிகிச்சை

advertisement by google

அறிகுறிகள்
சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட சீனாவின் வுஹான் நகரில் இருந்து தான் இந்த நோய் உலகிற்கு பரவி உள்ளது. கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். அதன் பிறகு, வறட்டு இருமலை உண்டாகி, ஒரு வாரத்திற்குப் பிறகு, மூச்சுத் திணறல் ஏறபட்டு மரணம் ஏற்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நான்கில் ஒருவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைகிறது.

advertisement by google

எப்படி தடுப்பது
தற்போது உள்ள சூழலில் மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாததால் அவற்றை கட்டுப்படுத்த வழி என்றால் ஒரு மனிதரிடம் இன்னொரு மனிதனுக்கு பரவாமல் தடுப்பதே தீர்வு.
இதற்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் வேண்டும். முழு பாதுகாப்பு உபகரணங்களுடன் கூடிய மருத்துவ பணியாளர்களை கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். யாரிடம் இருந்து எப்படி கொரோனா வைரஸ் பரவியது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

advertisement by google

தும்மலின் போது கைகுட்டை
கொரோனா வைரஸ் வாராமல் தடுக்க நமது உடல்நலத்தை நன்கு கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவ வேண்டும்.
இருமல் அல்லது தும்மும்போது துணியை வைத்து வாயை மூடிக்கொள்ள வேண்டும் இருமல் அல்லது மூக்கில் சளி பிரச்சனை இருந்தால் முகமூடியை அணியுங்கள். மருத்துவரை உடனடியாக நாட வேண்டும்.

advertisement by google

நெருக்கம் வேண்டாம்
வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குச் செல்லும்போது விமானத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால்: உங்களுக்கு உள்ள நோய் குறித்து விமானக் குழுவினருக்குத் தெரிவிக்க வேண்டும். முகமூடி அணியுங்கள். குடும்ப உறுப்பினர்கள் அல்லது சக பயணிகளுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க வேண்டும். இறங்கும் போது விமானக் குழுவினரின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். சீனாவிலிருந்து திரும்பிய ஒரு மாத காலத்திற்குள் நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால்: உங்கள் நோய் குறித்து அருகிலுள்ள சுகாதார நிலையத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் பயண வரலாறு குறித்து சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

advertisement by google

தள்ளி இருங்கள்
நோய்வாய்ப்பட்டால் பயணங்களைத் திட்டமிட வேண்டாம். அவசியமில்லை என்றால் சீனாவுக்குப் பயணம் செய்ய வேண்டாம். உடல்நிலை சரியில்லாத நபர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும் அல்லது இருமல், மூக்கு ஓடுவது போன்ற நோயின் அறிகுறிகளை கொண்டவர்களிடம் இருந்து தள்ளி இருப்பது நல்லது.

வேகவைக்காத இறைச்சி
சரியாக சமைக்காத இறைச்சிகளை உட்கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இறைச்சிகளை முழுமையாக வேகவைத்த பின்னரே சாப்பிட வேண்டும். பச்சையாக எந்த இறைச்சியையும் சாப்பிடக்கூடாது. காய்கறிகளை சாப்பிடுவது நல்லது.

போகக்கூடாத இடம்
அதேபோல் இறைச்சிகள் வெட்டப்படும் இடங்கள், விலங்குகள் கொல்லப்படும் இடங்கள், விலங்கு பண்ணைகள் போன்ற இடங்களுக்கு பயணம் செய்வதைத் தவிர்த்து விடுங்கள். சீனாவில் இறைச்சி கூடங்களில் இருந்தே மனிதருக்கு கொரோனோ வைரஸ் பரவிஇருப்பதாக சொல்லப்படுகிறது.

advertisement by google

Related Articles

Back to top button