குடும்பத்தாராறு குழந்தையை கிணற்றில் போட்டுத்தாய் தற்கொலைக்கு முயற்சி?
✍? குடும்பத் தகராறு… குழந்தையை கிணற்றில் போட்டு தாய் தற்கொலைக்கு முயற்சி..!
பெரம்பலூரில் குடும்பத் தகராறு காரணமாக, ஒரு வயது குழந்தையை கிணற்றில் போட்டுவிட்டு, தற்கொலை செய்ய முயன்ற தாய் காப்பாற்றப்பட்ட நிலையில், குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
பெரம்பலூர் எம்.ஆர்.நகரை சேர்ந்த சரவணன் – அன்பரசி தம்பதி, அங்குள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், அரியலூரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்ற அன்பரசி, அங்கு 5 வயதான முதல் மகள் தனுஷ்காவை விட்டுவிட்டு, பெரம்பலூர் திரும்பியுள்ளார்.
ஆனால், வழக்கம் போல் கணவன் – மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அன்பரசி, வீட்டு வளாகத்தில் உள்ள கிணற்றுக்குள், தனது ஒரு வயது குழந்தை மேகாஸ்ரீயை தூக்கி போட்டுவிட்டு, தானும் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அன்பரசியை உயிருடன் மீட்டனர். ஆனால், குழந்தை மேகாஸ்ரீயை மீட்க முடியவில்லை. இதையடுத்து, தீயணைப்பு படையினர் வந்து ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின், குழந்தையை சடலமாக மீட்டனர்.