இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி அருள்சரவணன் பாடல்காட்சி க்கு10கோடி செலவாம்?

advertisement by google

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் அருள் சரவணன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் பாடல் காட்சிகள் ரூ.10 கோடி செலவில் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

advertisement by google

இப்போது அந்தப் பாடல் காட்சிகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

advertisement by google

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் அருள் சரவணன் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். சரணவனா ஸ்டோர் விளம்பரப் படங்களில் விதவிதமாக கலர்புல்லாக வலைவந்த அவர் வெள்ளித் திரையில் தோன்றவுள்ளார். அவர் நடித்த விளம்பர படங்களை இயக்கிய, இரட்டை இயக்குனர்களான ஜேடி ஜெர்ரி இந்தப் படத்தை இயக்குகின்றனர்.

advertisement by google

இவர்கள் ஏற்கெனவே, விக்ரம், அஜீத் நடித்த ’உல்லாசம்’, விக்ரமாதித்யா, ஷெரின் நடித்த ’விசில்’ படங்களை இயக்கியவர்கள். இந்தப்படத்தில் கதாநாயகியாக வட இந்திய மாடல் கீத்திகா திவாரி நடிக்கிறார். இந்தப் படம் பேண்டஸி கதையை கொண்டது என்று கூறப்படும் நிலையில், இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ஹீரோவாக நடிக்கும் சரவணனனே படத்தை தயாரிக்கிறார்.

advertisement by google

இந்தப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் அண்மையில் தொடங்கியது. இந்த விழாவில் நடிகர் விவேக், பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், பாடல் காட்சிகள் தொடர்பாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில், மிகவும் பிரம்மாண்டமான முறையில் செட் அமைக்கப்பட்டுள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button