கோவில்பட்டி இலுப்பையூரணி பஞ்சாயத்துக்குட்பட்ட7வது வார்டு ஒன்றியகவுன்சிலருக்கு போட்டியிடும் மணிஅன்புராஜ் இன்று கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அன்புராஜ் தலைமையில் வேட்பு மனுத்தாக்கல்?
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இலுப்பையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கூசாலிபட்டி ,பூசாரிபட்டி ,தாமஸ்நகர்,விஸ்வநாததாஸ்காலனி பகுதியில் 7வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் மணி அன்புராஜ் இன்று கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக ஆர்வலர் பா.அன்புராஜ் தலைமையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்
இதையொட்டி கோவில்பட்டி எட்டயபுரம் ரோட்டில் அமைந்துள்ள சட்டமாமேதை அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று வீரன்சுந்தரலிங்கனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் பின்பு அங்கிருந்து சமூக ஆர்வலர் அன்புராஜ் தலைமையில் ஊர்வலமாக சென்று கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அலுவலக அதிகாரிகளிடம் மனு தாக்கல் செய்தார்
இதில் முன்னாள் ராணுவவீரர் சுப்பையா ,முன்னாள் காவல்துறை உதவிஆய்வாளர் பால் மாணிக்கம் ,காப்பீட்டு கழக ஊழியர் பால்துறை , ரியல் எஸ்டேட் உரிமையாளர் மாரியப்பன், டிராவல்ஸ் உரிமையாளர் பழனி நகைக்கடை அதிபர் முருகன் செல்வேந்திரன் தலையாரி மாடசாமி தாமஸ்நகர் மோசஸ்அந்தோணி, அமல்ராஜ் ,ராஜேந்திரன் ,ஜவகர் ,மாரிசாமி ,கனகராஜ் ,பிரகாஸ் பெருமாள்சாமி ,குழந்தைவேல் ,காளியம்மாள் ,சண்முகத்தாய் ,லட்சுமி, மகேஷ்,பிரேமா , உஷா,
ஜெயக்குமாரி ,செல்வம் உட்பட கூசாலிபட்டி ,பூசாரிபட்டி ,தாமஸ்நகர் ,விஸ்வநாததாஸ் காலனி, பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்