புதியசர்ச்சை… பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம் மத்தியஅரசு விளக்கம்?
புதிய சர்ச்சை.. பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம்.. மத்திய அரசு விளக்கம்.
டெல்லி: பாஸ்போர்ட்டில் தாமரை சின்னத்தை அச்சிட்டு மத்திய அரசு புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போலி பாஸ்போர்ட்டுகளை எளிதாக அடையாளம் காண்பதற்காக தாமரை சின்னம் அச்சிடப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு திட்டத்தை கொண்டுவந்துள்ள மத்திய அரசு, தற்போது புதிய கொள்கைகள் பலவற்றை அமல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் பாஸ்போர்ட்டில் தாமரை சின்னத்தை அச்சிட்டு புதிய சர்ச்சையை மத்திய அரசு கிளப்பி உள்ளது.
பயணங்கள் முடிவதில்லை.. ”பல” கருப்பையா சொன்னது சத்தியமான உண்மை.. நமது அம்மா கடும் தாக்கு
என் தாமரை முத்திரை
லோக்சபாவில் நேற்று முன்தினம் நடந்த கேள்வி நேரத்தில் கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி ராகவன் இதுபற்றி கேள்வி எழுப்பினார். அவர் தனது பேச்சின் போது, கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் புதிதாக விநியோகிக்கப்பட்டு இருக்கும் பாஸ்போர்ட்டில் தாமரை முத்திரை இடம் பெற்றுள்ளது. இது குறித்து நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளது.
எதிர்க்கட்சிகள்
பாஸ்போர்ட்டில் தேர்தல் சின்னமான தாமரை இடம் பெறுவது ஏன்? நாட்டை காவி மயம் ஆக்கும் பாஜகவின் முயற்சியா? என்று ராகவன் கேள்வி எழுப்பினார். இவரை தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பலரும் இந்த பிரச்னையை எழுப்பி கூச்சலிட்டனர்.
தேசிய மலர் தாமரை
இதனிடையே இந்த பிரச்சனை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “புதிய பாஸ்போர்ட்டில் பாதுகாப்பு அம்சமாக தேசிய மலரான தாமரை அச்சிடப்பட்டுள்ளது. இது போலி பாஸ்போர்ட்டுகளை எளிதில் அடையாளம் காண உதவும்.
வேறு சின்னமும்
சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின் வழிகாட்டுதல் படி, பாஸ்போர்ட்டில் இந்த பாதுகாப்பு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தாமரை மட்டுமின்றி நாட்டின் தேசிய சின்னங்களும் சுழற்சி முறையில் பாஸ்போர்ட்டில் பயன்படுத்தப்படும். இப்போது தாமரை பயன்படுத்தப்பட்டுள்ளது.அடுத்த மாதம் வேறு தேசிய சின்னம் பயன்படுத்தப்படும்” இவ்வாறு கூறினார்.