இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்விவசாயம்

எகிப்து வெங்காயத்தை வாங்க பொதுமக்களிடையே ஆர்வம் இல்லை ஏன்?

advertisement by google

வெங்காய தட்டுப்பாடு நிலவினாலும் எகிப்து வெங்காயத்தை வாங்க பொதுமக்களிடையே ஆர்வம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.*

advertisement by google

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்திருப்பதோடு, கடும் தட்டுப்பாடும் நிலவுகிறது. வெங்காய உற்பத்தியில் முன்னணி வகிக்கும், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்ததே இந்த விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் கூறுகின்றனர். வெங்காய விளைச்சல் பாதிப்பால் அதன் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
வெங்காய தட்டுப்பாட்டை போக்க எகிப்தில் இருந்து வெங்காயத்தை அரசு இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில் எகிப்திலிருந்து திருச்சி வெங்காய மார்க்கெட்டுக்கு 30 டன் பெரிய வெங்காயம் வந்துள்ளது. இந்த வெங்காயம் கிலோ 120 ரூபாய் என மொத்த விற்பனை செய்யப்படுகிறது.
வெங்காய தட்டுப்பாடு நிலவினாலும் எகிப்து வெங்காயத்தை வாங்க பொதுமக்களிடையே ஆர்வம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள வெங்காய மண்டிக்கு வந்த எகிப்து வெங்காயம் அப்படியே இருப்பதாகவும், பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் சில்லறை வியாபாரிகளும் வெங்காயத்தை வாங்க ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிகிறது.
ஒரு கிலோ ரூ.90வரை விலைகுறைக்கப்பட்ட போதிலும் எகிப்து வெங்காயத்தை வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. அளவில் மிகப்பெரிய வெங்காயமாக இருப்பதால் ஒருகிலோவுக்கு 4 வெங்காயம் மட்டுமே இருப்பதாகவும், அதனால் இதனை வீட்டில் பயன்படுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டாததே எகிப்து வெங்காயம் விற்பனையாகாமல் இருப்பதற்கு காரணமாகவும் கூறப்படுகிறது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button