அக்கா கணவரை சராமாரியாக வெட்டி கொலை செய்த பெண்?தன்னைப்பற்றி அவதூரக பேசியதால் வெறிச்செயல்? தேனியில் பரபரப்பு ?
தன்னைப் பற்றி அவதுாறாகப் பேசி வந்த தனது கணவரின் அக்கா கணவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார் ஒரு பெண்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியைச் சேர்ந்தவர் 30 வயதான பாண்டீஸ்வரன் மற்றும் 24 வயதான நிரஞ்சனா தம்பதி.
சனிக்கிழமை காலை 7 மணியளவில் இருவரும் தங்கள் இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள ஒத்தப்பட்டி கிராமத்தை நோக்கிச் சென்றனர். சண்முகா நதி அணை செல்லும் சாலையில், பாண்டீஸ்வரனின் அக்கா ராஜேஸ்வரி மற்றும் அவரது கணவர் 36 வயதான மணிகண்டன் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அவர்களை வழிமறித்த பாண்டீஸ்வரனும், நிரஞ்சனாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில நொடிகளில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் நிரஞ்சனா, மணிகண்டனை சரமாரியாக வெட்டியுள்ளார், பாண்டீஸ்வரனும் தாக்கியுள்ளார். தடுக்க வந்த ராஜேஸ்வரிக்கு கையில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் விழுந்த மணிகண்டன் அங்கேயே உயிரிழந்தார். பாண்டீஸ்வரனும் நிரஞ்சனாவும் தப்பியோடி விட்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வீட்டில் பதுங்கியிருந்த இருவரும் போலீசாரிடம் சிக்கினர்
கொலைக்கான காரணம் என்ன?
மணிகண்டனும், பாண்டீஸ்வரனும் சில ஆனைமலையன்பட்டியில் டீக்கடை வைத்து நடத்தி வந்தனர். அதில் நஷ்டம் ஏற்படவே, இருவரும் வாழையிலை அறுக்கும் வேலைக்கு செல்லத் தொடங்கினர்.இந்நிலையில், மணிகண்டன் குடிபோதையில் அடிக்கடி ராயப்பன்பட்டிக்கு சென்று, அங்குள்ள சிலரிடம் தனது மைத்துனர் பாண்டீஸ்வரனின் மனைவியான நிரஞ்சனா நடத்தை குறித்து அவதூறாகப் பேசி வந்துள்ளார்.இதுதொடர்பாக அடிக்கடி இருகுடும்பங்களுக்கும் தகராறுகள் நடந்து வந்துள்ளன. எனினும் மணிகண்டன் தனது அவதுாறுப் பிரசாரத்தை நிறுத்தவில்லைசனிக்கிழமை அன்று மணிகண்டனை நேரில் சந்தித்து இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக பேசிவிட்டு வரலாம் என பாண்டீஸ்வரனும், நிரஞ்சனாவும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனரஅப்போது வாழை இலை அறுக்கும் வேலைக்காக மணிகண்டனும் அவரது மனைவி ராஜேஸ்வரியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த பாண்டீஸ்வரனும் நிரஞ்சனாவும் பேச்சுவார்த்தை நடத்திய போதுதான் வாக்குவாதம் ஏற்பட்டு கொலையில் முடிந்துள்ளது.ராஜேஸ்வரி அளித்த வாக்குமூலத்தின்படி வீட்டில் பதுங்கியிருந்த பாண்டீஸ்வரனையும், நிரஞ்சனாவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.காயமடைந்த ராஜேஸ்வரி, தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நடத்தை குறித்து அவதுாறாகப் பேசி வந்த உறவினரை ஒரு பெண்ணே அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் தேனி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது