ஆசிரியரா இருக்க படிப்பறிவு போதும்? ஆனா பள்ளியோட முதல்வரா இருக்க அனுபவ அறிவுதான் முக்கியம்?
ஆசிரியரா இருக்க படிப்பறிவு போதும்;
ஆனா, ஒரு பள்ளியோட முதல்வரா இருக்க படிப்பறிவை காட்டிலும் அனுபவ அறிவு முக்கியம்
இந்த அனுபவ அறிவு தான், கடந்த 10 வருஷமா மதுரை திருப்பாலை, வேலம்மாள் நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியோட முதல்வரா என்னை நிலைக்க வைச்சிருக்கு!
வெ.சுந்தராம்பாள்.நான் ஏன் முதல்வர்?
உரையாடுதல் எனக்கு ரொம்ப பிடிக்கும். இதுக்காகவே திட்டமிட்டு, என் விருப்பப்படி 2002ல ஆசிரியரானேன்
ஆனா, ஒரு பள்ளிக்கு முதல்வராகணும்னு நான் எந்தவிதத்திலும் திட்டமிட்டது கிடையாது
கிடைச்ச வாய்ப்புகளை சரியா பயன்படுத்திக்கிட்ட விதம் தான், என்னை முதல்வராக்குச்சு. இந்த நிமிஷம், இந்த இருக்கையில உட்கார்ற தகுதி எனக்கு இருக்கிறதா என் மனசாட்சி நம்புது.ஆளுமை என்பது…ஆளுமை, அதிகாரம் ரெண்டும் வேற வேற! ஒரு குழுவை கட்டுக்கோப்பா வழிநடத்துற பக்குவமும் புத்தியும் சேர்ந்தது, ஆளுமை. \’வழிநடத்துறேன்\’ங்கிற பேர்ல கட்டாயப்படுத்தி ஆரோக்கியமற்ற விஷயங்களை புகுத்துறது அதிகாரம்!இது என் பாணி!மாணவர்களுக்கு ஆசிரியர்களோட பழக எப்பவுமே தயக்கம் இருக்கும். அதுவும், பள்ளி முதல்வரை நெருங்க ரொம்பவே யோசிப்பாங்க! \’இந்த தடையை தகர்த்துட்டா, அவங்க நடவடிக்கைகளை அவங்க மூலமாகவே தெரிஞ்சுக்க முடியும்; அதை சுட்டிக்காட்டி திருத்த முடியும்\’னு நம்பினேன். இப்போ, இதை வெற்றிகரமா செயல்படுத்திட்டு வர்றேன்.பெற்றோரே..எங்க குழந்தைங்க வீட்ல செல்போன் பயன்படுத்துறாங்க; பொய் பேசுறாங்க\’ன்னு ஆசிரியர்கள்கிட்டே புகார் சொல்ற உங்களால, \’நான் வீட்ல தேவையில்லாம செல்போன் பயன்படுத்துறது இல்லை; பொய் பேசுறது இல்லை\’ன்னு சொல்ல முடியுமா; உங்க குழந்தையோட முதல் ஆசிரியர் நீங்க தான்; உங்க நடவடிக்கை தான் அவங்களோட முதல் பாடம்!ஆசிரியர்களே..ஒரு நாளோட பெரும்பகுதியை பள்ளியில கழிக்கிற மாணவர்களுக்கு, நீங்க 100 சதவீதம் ஆசிரியரா மட்டும் இருக்கணுமா, இல்ல… 50 சதவீதம் ஆசிரியராகவும், 50 சதவீதம் பெற்றோராகவும் இருக்கணுமா?\r\n\r\nநெஞ்சு பொறுக்குதில்லையே!\r\n\’நாம நிம்மதியா வாழணும்னா அடுத்தவங்க நிம்மதியை கெடுத்தே ஆகணும்\’ங்கிற முடிவுக்கு இந்த சமூகம் வந்திடுச்சு. \’நேர்மையா இருக்கணும்\’ங்கிற எண்ணமே கேலிக்குரியதா மாறிடுச்சு. \’மது இல்லாம வாழவே முடியாது\’ங்கிற சூழலை உருவாக்கிட்டாங்க. இதையெல்லாம் நினைக்கிறப்போ மனசு கொதிக்குது!அந்த ஒரு நாள்…
பாடங்களை மாணவர்கள் கொண்டாடி படிக்கணும்; அந்த நாளுக்காக ஆவலோட காத்திருக்கேன்.