தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

துப்புரவு தொழிலாளர் அவலநிலை? பாதுகாப்பு உபகரணமா அது எப்படி இருக்கும்?

advertisement by google

பாதுகாப்பு உபகரணமா? அது எப்படி இருக்கும் இதுவரை நாங்கள் கேள்விபட்டதுமில்லை பார்த்ததுமில்லை……..

advertisement by google

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம் சு.கொல்லூர் கிராமத்தில்
துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும், உயிர்ப் பாதுகாப்பே இல்லாமலும் பணி செய்கிறார்கள்.
இது குறித்து பணியாளரிடம் கேட்டபோது பாதுகாப்பு உபகரணமா? அது எப்படி இருக்கும் இதுவரை நாங்கள் கேள்விபட்டதுமில்லை, பார்த்ததுமில்லை. எனக் கூறுகின்றனர்.
எனவே அவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், தமிழக அரசு சத்துணவு அமைப்பாளர்களுக்கு கையுறை, முகமூடி, தலைப்பாகை, உடலில் உணவு சிதறாமலிருக்க உடலுறை மற்றும் அதை கண்கானிக்க ஒரு துறை என கெடுபுடி காட்டும் இதே தமிழகத்தில் தான் சேறு, துர்நாற்றம் என எந்த பாதுகாப்பில்லாமல் உயிரை வருத்தி செய்யும் துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை அரசு கொடுத்தும் அதைக் கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வரவில்லையா? சு.கொல்லூர் கிராம துப்புரவு பணியாளர்களுக்கு கையுறை, சீருடை மற்றும் முகமூடி வழங்கி பணியாளர்களின் உயிர் நலனைக் கருத்தில் கொண்டு சம்பந்தபட்ட மாவட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி சமூக ஆர்வலர்கள், கிராம வளர்ச்சிக் குழு இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

advertisement by google

நிருபர்வேப்பம்பட்டி சுகன்யா த.முரளிதரன்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button