இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

46000ரூபாய் செல்லாத நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகள்?சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த திருப்பூர் காலெக்டர்?

advertisement by google

♦செல்லாத நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகளின் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த திருப்பூர் ஆட்சியர்

advertisement by google

?பணமதிப்பிழப்பு செய்தது தெரியாமல் மூதாட்டிகள் வைத்திருந்த பழைய 46 ஆயிரம் ரூபாயை வங்கிகள் மூலம் மாற்ற முடியாது என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

advertisement by google

?திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பூமலூர் பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் ரங்கம்மாள் (75) தங்கம்மாள் (78) . இருவரும் தங்களது கணவர்கள் இறந்த நிலையில் மகன்கள் வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் உடல்நிலை சரியில்லாத சூழ்நிலையில், இவர்களது மகன்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்று வந்தனர்.

advertisement by google

?மேல் சிகிச்சைக்கு பணம் தேவை என்ற நிலையில், மகன்களிடம் பணம் இல்லாததால் தங்களது தாயாரிடம் பணம் இருக்கிறதா என கேட்டபோது, நிறைய வைத்துள்ளோம் என இருவரும் கூறி  பல ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து தங்களது மகன்களிடம் கொடுத்துள்ளனர்.

advertisement by google

?ரங்கம்மாள் தான் சேர்த்து வைத்திருந்த 24 ஆயிரம் ரூபாயையும் தங்கம்மாள் 22 ஆயிரம் ரூபாயையும் கொடுத்துள்ளார். இந்த பணத்தை பார்த்த மகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் . இந்த பணம் செல்லாது என மகன்கள் தெரிவித்ததால் மூதாட்டிகள் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

advertisement by google

?மேலும் பணம் செல்லாது என்ற விபரம் தங்களுக்கு தெரியாது எனவும் வேதனை அடைந்துள்ளனர்.

advertisement by google

?இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் “பணமதிப்பிழப்பு செய்தது தெரியாமல் மூதாட்டிகள் வைத்திருந்த 46 ஆயிரம் ரூபாய் (பழைய 500 மற்றும் 1000 ருபாய்) பணத்தை வங்கிகள் மூலம் மாற்ற முடியாது.

advertisement by google

?சிகிச்சை தேவைப்படும் மூதாட்டிக்கு அரசு சார்பில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு மூதாட்டிகளுக்கும் அரசின் சார்பில் முதியோர் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

advertisement by google

Related Articles

Back to top button