உலக செய்திகள்

பாட்ஷா படம் திரும்பவும் ரிலீஸாம் உலக ரசிகர்களுக்காகவாம்?

advertisement by google

ரஜினிகாந்தின் தர்பார் படத்துக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில் தற்போது வெளியான தகவல் அவர்களை மேலும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

advertisement by google

1995 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் ரஜினியின் ‘பாட்ஷா’. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நக்மா, ரகுவரன், விஜயகுமார், தேவன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக திரையில் ஓடி ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற படம் ’பாட்ஷா’. இந்த படம் சமீபத்தில் டிஜிட்டல் வடிவில் மாற்றியமைக்கப்பட்டு மீண்டும் திரையிடப்பட்டது.

advertisement by google

இந்நிலையில், கோவா திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் கோல்டன் ஐகான் விருது பெற்றதை வரவேற்கும் விதமாகவும், அவரது பிறந்தநாள் அடுத்த மாதம் 12 ந் தேதி கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டும் பாட்ஷா படத்தை மீண்டும் திரையிட அதன் தயாரிப்பு நிறுவனமான சத்யா மூவிஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. அதில், “டிசம்பர் 11ம் தேதி ரஜினியின் பாட்ஷா படம் உலக அளவில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் திரையிடப்பட உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button