தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்

5 ரூபாய்க்கு ஆம்லெட் விற்கும் அதிசயக்கடை? அருவி குளியலும் ஆம்லெட்டும் அடடா?

advertisement by google

?✳5 ரூபாய்க்கு ஆம்லெட் விற்கும் அதிசயக்கடை : அருவி குளியலும் ஆம்லெட்டும்… அடடா..!⛔

advertisement by google

5 ரூபாய் ஆம்லெட் கடை
கோவை மாவட்டத்தில் இருக்கும் சிறுவானிக்குப் பல பெருமைகள் உண்டு. சிறுவானி நீர்தான் என்று கோவைக்காரர்கள் அடித்துச் சொல்வார்கள் நம்பாமல் சிரித்தால் அடிக்க வருவார்கள்.

advertisement by google

கேரளமாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இருக்கும் மன்னார்காடு தாலுகாவில் உள்ள அட்டபாடி பள்ளதாக்கில் உற்பத்தியாகும் இதுதான் கோவை மாநகரின் குடிநீர் ஆதாரம். இதில் ஒரு அருவி இருக்கிறது அதைக் கோவைக் குற்றாலம் என்கிறார்கள். கோவை மக்களின் பிரபலமான் பிக்னிக் ஸ்பாட் அந்த அருவி.

advertisement by google

அருவிக்குப் போகும் சாலையில் ஆலாந்துறை பஞ்சமுக அரசமரத்துக்கு அருகில் இருக்கிறது இந்த 5 ரூபாய் ஆம்லெட் கடை.

advertisement by google

கடையை நடத்துபவரின் பெயர் சத்தியராஜ் தொழில் முட்டை வியாபாரம் . 1984-ல் இருந்து இந்த ஆம்லெட் கடையை நடத்தி வருகிறார். அப்போது 50 காசுக்கு ஆம்லெட் போட்டுக் கொடுத்து இருக்கிறார். முட்டை விலை ஏற ஏற ஆம்லெட்டின்  விலையும் ஏறி ஏறி… இப்போது 5 ரூபாய்க்கு வந்திருக்கிறது!

advertisement by google

நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் முட்டைகளை தான் வாங்கி விற்பதால் தனக்கு குறைந்த விலையில் முட்டைகள் கிடைக்கின்றன என்கின்றனர். கோவை குற்றாலத்துக்கு போகிறவர்களும் வருகிறவர்களும் சத்திய ராஜின் முட்டைக் கடையை எட்டிப் பார்க்காமல் போவதில்லை.

advertisement by google

சத்தியராஜும் அவர் மனைவியும்தான் கடையை நடத்துகிறார்கள். சராசரியாக 300 முதல் 500 ஆம்லெட்கள் போகும். விடுமுறை தினங்களில் கொஞ்சம் கூடுதலாக விற்பனையாகும்  என்கிறார். ஆம்லெட், ஆஃப்பாயில், ஃபுல்பாயில், கலக்கி என்று முட்டையை நீங்கள் எப்படி கேட்டு வாங்கி சாப்பிட்டாலும் ஐந்து ரூபாய்தான் சுடச்சுடப் போட்டுத் தருகிறார்கள்.

advertisement by google

முட்டைகள் மட்டும்தானா,என்றால் சிக்கன் சில்லி இருக்குங்க என்கிறார் அது 100 கிராம் முப்பது ரூபாய் எப்போதும் சூடாகவே வைத்திருக்கிறார்.

விடுமுறை என்பதே கிடையாதாம், வருடத்தில் ஒரு நாளோ ரெண்டு நாளோதான் லீவு என்கிறார். ஹைவே காரர்கள்தான் ஒரே தொல்லை,இதுவரை இண்டு தடவை இடம்மாற வைத்து விட்டார்கள் என்கிறார்.

5 ரூபாய் தானா? என்று அலட்சியமாக நினைக்காதீர்கள். சுவையும் சூடுமாக இருக்கிறது சத்தியராஜ் கடை ஆம்லெட்.

அடுத்த முறை கோவைக் குற்றாலம் போனால் குளிக்கிறீர்களோ இல்லையோ, ஆம்லெட் சாப்பிட மறந்து விடாதீர்கள்.

advertisement by google

Related Articles

Back to top button