தர்பார் வியாபாரம் ஆரம்பம்?லைகாவால் தர்மசங்கடத்தில் ரஜினி?
தர்பார் வியாபாரம் ஆரம்பம்..! லைகாவால் தர்ம சங்கடத்தில் ரஜினிகாந்த்…!!
ரஜினியின் ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ‘தர்பார்’ படத்தையும் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ள லைகா நிறுவனம், தற்போது படத்தின் வியாபாரத்தை தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சன் பிக்சர்ஸ், வேல்ஸ் பிலிம்ஸ் எனத் தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வரும் நிறுவனங்கள் ‘தர்பார்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்ற போட்டி போடுகிறதாம்.
திரைப்படத் துறையில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனங்கள் போட்டி போடுவது ஒரு பக்கம் இருந்தாலும், அதிமுக-வில் முதலமைச்சர் எடப்பாடிக்கு அடுத்தபடியாக இருக்கும் முக்கியமானவரை பின்னணியில் வைத்துக் கொண்டிருப்பவர் ஒருவரும் ‘தர்பார்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்ற முயற்சித்து வருகிறாராம்.
படத்திற்கு இத்தனை பேர் போட்டி போடுவதை பார்த்து வியந்த லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், படத்தின் விலையை அதிகரித்து விட்டதாம். அதாவது, தமிழக வெளியீட்டு உரிமைக்கு மட்டும் சுமார் ரூ.70 கோடிக்கு மேல் விலை நிர்ணயித்துள்ளதாம். ஆனால், படத்தை வாங்க போட்டி போடும் அனைவரும் ரூ.60 கோடியைத் தாண்டாததால், இன்னும் வியாபாரம் முடியவில்லையாம்.
‘பேட்ட’ படம் தமிழகத்தில் தயாரிப்பாளரின் ஷேராக சுமார் ரூ.54 கோடி வசூலித்ததாகவும், அதனை வைத்தே ‘தர்பார்’ படத்தை வாங்க முயற்சிப்பவர்கள், ரூ.60 கோடிக்கு மேல் விலை கொடுக்க யோசிப்பதாகவும் கூறப்படுகிறது.
இருந்தாலும் லைகா நிறுவனம், தான் நிர்ணயித்த விலையை குறைக்காமல் பிடிவாதம் பிடிக்கிறதாம்.
இந்த விவகாரம் ரஜினி காதுக்குப் போக, அதிர்ச்சியடைந்தவர், லைகா நிறுவனத்திற்கு எதற்கு இந்தப் பேராசை, இவர்கள் செய்யும் தவறால், எனக்குத் தான் கெட்டப் பெயர் வருகிறது, என்று வருத்தமும் பட்டாராம்.