இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

நித்தியானந்தாவை கைதுசெய்ய மத்தியரசு உதவியை நாடிய குஜராத்திய போலீஸ்?

advertisement by google

advertisement by google

??நித்தியானந்தா எங்கே ? மத்திய அரசின் உதவியை நாடிய குஜராத் போலீஸ்

advertisement by google

வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய சாமியார் நித்யானந்தாவை, சிறுவர்கள் கடத்தல் வழக்கில் கைது செய்ய மத்திய அரசின் உதவியை நாடியுள்ளதாக குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர்.

advertisement by google

குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரண்டு சிறுவர்களை அடைத்து வைத்து குழந்தை தொழிலாளர்களாக பயன்படுத்தியதாக நித்யானந்தா ஆசிரம் மீது புகார் எழுந்தது

advertisement by google

சிறுவர்களை வைத்து ஆசிரமத்திற்கு நிதி திரட்டியதாகவும், அப்போது சிறுவர்களை அடித்து துன்புறுத்தியதாகவும் நித்யானந்தாவின் பெண் சீடர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் வைத்திருந்தது உள்ளிட்ட புகார்களில் குழந்தைகளை சட்டவிரோதமாக அடைத்து நித்யானந்தா மீதும் அகமதாபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இது தொடர்பான விசாரணைக்கு நித்யானந்தாவை அழைத்த போது அவர் வெளிநாடு தப்பிச் சென்றது தெரியவந்ததாக அகமதாபாத் போலீசார் கூறியிருந்தனர். தற்போது நித்யானந்தா எங்கு சென்றுள்ளார் என்பதை அறிய வெளியுறவுத்துறையின் உதவியை நாடியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.மேலும் வெளிநாட்டில் இருந்து நித்யானந்தாவை இந்தியா கொண்டுவர மத்திய அரசின் பல்வேறு புலனாய்வு அமைப்புகளின் உதவியை கோரியுள்ளதாகவும் அகமதாபாத் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே நித்யானந்தாவின் பாஸ்போர்ட் 2018ம் ஆண்டே காலாவதியாகிவிட்டதாகவும், அவர் போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வெளிநாடு தப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button