கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

உண்மையை கூறி பள்ளியில் விடுப்பு கேட்ட மாணவர் தீபக்கிற்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றது?

advertisement by google

மாணவன் தீபக்

advertisement by google

உண்மையைப் பேசி விடுப்பு கேட்டதால் மாணவன் தீபக்கின் விடுப்புக் கடிதம் வைரலாகி வருகிறது பாராட்டுக்கள் குவிந்துவருகிறது?

advertisement by google

திருவாரூர், மேலராதாநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளியில் தீபக் என்ற மாணவர் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

advertisement by google

இவர் கடந்த 18ஆம் தேதி வகுப்பு ஆசிரியர் மணிமாறனுக்கு விடுமுறைக் கடிதம் ஒன்று எழுதி இருந்தார்.

advertisement by google

அந்தக் கடிதத்தில், ”எனது ஊரில் கபடிப் போட்டி நடைபெற்றது.

advertisement by google

நான் அங்கு சென்று பார்த்தேன்.

advertisement by google

அதனால், எனது உடல் சோர்வாக உள்ளதால் இன்று மட்டும் விடுப்பு தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று மாணவன் தீபக் குறிப்பிட்டு இருந்தார்.

advertisement by google

இந்தக் கடிதம் தன்னை மிகவும் கவர்ந்து இருந்த காரணத்தால், தனது ஃபேஸ்புக்கில் ஆசிரியார் மணிமாறன் பதிவு செய்து இருந்தார்.

இதையடுத்து இக்கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது.

மாணவன் தீபக் லீவ் லெட்டர்

மாணவன் தீபக்கை ஆசிரியர் மணிமாறன் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

அவர் அளித்திருக்கும் பேட்டியில், ”மாணவன் தீபக் நன்றாக படிக்கக் கூடியவர்.

பள்ளிக்கு ஏதாவது பொருள் வாங்கி வருகிறேன் என்று கூறிவிட்டு, வாங்காமல் வந்தால் ஞாபகப்படுத்துவார்.

எங்களது பள்ளியில் ஆசிரியர்களுடன் மாணவர்கள் சகஜமாக பழக வேண்டும் என்பதற்காக பள்ளியில் ஒரு கருத்து சுதந்திர பெட்டி வைத்து இருக்கிறோம்.

அதில் மாணவர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்வார்கள்” என்றார்.

பொய் சொல்லாமல் நேர்மையாக, உண்மை காரணத்தைக் கூறி விடுப்பு கேட்டதால் தீபக்கின் லீவ் லெட்டர் வைரலாகி வருகிறது.

பாராட்டுக்களும் குவிகிறது.

advertisement by google

Related Articles

Back to top button