இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

திருமாவளவனுக்கு எதிராக அவதூறு பதிவு நடிகை காயத்ரிரகுராம் வீடு முற்றுகை?

advertisement by google

advertisement by google

திருமாவளவனுக்கு எதிராக ட்விட்டரில் அவதூறாக பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராமை கண்டித்து, அவரது வீட்டை முற்றுகையிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

advertisement by google

இந்த அச்சுறுத்தலுக்கு எல்லாம், தாம் அச்சப்படப்போவதில்லை என தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்

advertisement by google

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கள், அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

advertisement by google

நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை பற்றி அவதூறாக பதிவிட்டு, அதற்கு எதிர்ப்பு கிளம்பிய பின்பு அந்த பதிவை நீக்கியதாக கூறப்படுகிறது

advertisement by google

இந்நிலையில் சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள காயத்ரி ரகுராமின் வீட்டை முற்றுகையிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

advertisement by google

அப்போது பெண்கள் சிலர் வீட்டிற்குள் நுழைய முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனிடையே விடுதலை சிறுத்தைகள் போராட்டம் குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், திருமாவளவன் இந்து மதத்தை தொடர்ந்து விமர்சித்து பேசி வருவதாகவும், தற்போது அவரது ஆட்களை விட்டு தம்மை தொந்தரவு செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.இந்த அச்சுறுத்தலுக்கு எல்லாம் அச்சப்பட போவதில்லை என பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், தனது மதத்திற்காகவும், நாட்டிற்காகவும் உயிரை கூட கொடுக்க தயார் என தெரிவித்துள்ளார். மற்றொரு பதிவில், வரும் 27ஆம் தேதி, மெரினா கடற்கரைக்கு தாம் தனியாக செல்ல உள்ளதாகவும், அங்கு இந்து மதத்தை பற்றி தவறாக பேசி வருபவர்களிடம் விவாதிக்க தயார் என்றும் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். \r\n \r\nநடிகை காயத்ரி ரகுராமுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button