இந்தியாஉலக செய்திகள்தொழில்நுட்பம்

நடுவானில் தவித்த இந்திய பயணிகள் விமானம்? காப்பாற்றிய பாகிஸ்தான் அதிகாரி?

advertisement by google

மோசமான வானிலையால் நடுவானில் தவித்த இந்திய பயணிகள் விமானம்.. காப்பாற்றிய பாகிஸ்தான் அதிகாரி.

advertisement by google

இஸ்லாமாபாத்: மோசமான வானிலையால் நடுவானில் தவித்த இந்திய பயணிகள் விமானத்தை பாகிஸ்தான் விமான கட்டுப்பாட்டு அதிகாரி காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

advertisement by google

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மஸ்கட் நோக்கி 150 பயணிகளுடன் இந்திய விமானம் பறந்து சென்று கொண்டிருந்தது. அந்த விமானம் பாகிஸ்தானின் கராச்சி எல்லைக்கு அருகே பறந்து சென்று கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட மின்னல் காரணமாக 2 ஆயிரம் அடி இறங்கி 34 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க ஆரம்பித்தது.

advertisement by google

இதனால் அதிர்ச்சி அடைந்த இந்த விமானி பாகிஸ்தான் விமானபோக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தை தொடர்பு கொண்டு மோசமான வானிலை நிலவுவதை எடுத்து கூறியிருக்கிறார்.
இதையடுத்து கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பாகிஸ்தான் வான் வழியில் சரியான பாதையில் பயணிக்க பாகிஸ்தான் விமான கட்டுப்பாட்டு நிலைய அதிகாரி உதவி செய்தார். இதன் காரணமாக விமானம் பத்திரமாக பாகிஸ்தான் எல்லையை கடந்து சென்றது.
பால்கோட் தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்தியா விமானங்கள் பயன்படுத்த தடை விதித்து இருந்தது. இந்த தடை யை கடந்த ஜுலை 16ம் தேதி விலக்கி கொண்டது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button