இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

இலங்கை அதிபர் தேர்தல்? கோத்தபயராஜபக்சே, சஜித் பிரேமதாசா இடையே கடும்போட்டி?

advertisement by google

advertisement by google

இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கோத்தபய ராஜபக்சே, சஜித் பிரேமதாசா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

advertisement by google

இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் ஜனவரி 9ம் தேதி நிறைவடைவதால்,

advertisement by google

புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடக்கிறது.

advertisement by google

இலங்கை சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிபர் மைத்ரிபால சிறீசேனா, இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அவரது கட்சியே ஒப்புதல் அளிக்கவில்லை

advertisement by google

இதையடுத்து அவர் தனது ஆதரவை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபயவுக்குத் தெரிவித்துள்ளார்.

advertisement by google

முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலாளரான கோத்தபய தான், விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்டப் போரை முன்னின்று நடத்தியவர்

advertisement by google

அவரை எதிர்த்து ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனும், இலங்கை அமைச்சருமான சஜித் பிரேமதாசா போட்டியிடுகிறார்.

அவருக்கு தமிழர் தேசியக் கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது.

இத்தேர்தலில் வாக்களிக்க ஒரு கோடியே 59 லட்சம் பேர் பதிவு பெற்றுள்ளனர்.

காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப் பதிவு, மாலை 5 மணி வரை நடைபெறும். வழக்கம் போல் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படும். எனினும், முழுமையான தேர்தல் முடிவுகள் வழக்கத்தைவிட தாமதாகும் எனக் கூறப்படுகிறது

முழு முடிவுகளை திங்கள்கிழமை காலைதான் வெளியிட முடியும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.

இலங்கையில், பதவியில் இருக்கும் அதிபரோ, பிரதமரோ அல்லது எதிர்க்கட்சித் தலைவரோ போட்டியிடாத முதல் அதிபர் தேர்தல் இதுவாகும். தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

advertisement by google

Related Articles

Back to top button