கல்விபயனுள்ள தகவல்

குப்பைத்தொட்டி?

advertisement by google

குப்பைத்தொட்டி.

advertisement by google

மிக அவசியமான உலகின் ஒரு பொருள் !

advertisement by google

பலரும் இழிவாக மதிப்பிடும் ஒரு பொருள் !

advertisement by google

குப்பைத்தொட்டி இல்லையென்றால்
மற்ற இடங்களின் அழகு இல்லாமல் போய் விடும் !

advertisement by google

குப்பைத்தொட்டி இல்லாத வீடோ,
அலுவலகமோ இருக்கவே முடியாது !

advertisement by google

என்னை பிரமிக்க வைத்த ஒரு பொருள் !

advertisement by google

வாழ்க்கையின் பல யதார்த்தங்களை
ரகசியமாய் சொல்லிக் கொடுக்கும் ஒரு பொருள் !

advertisement by google

குப்பைத் தொட்டியிடமிருந்து நான் கற்றவை பல !

என்ன சிரிக்கிறாயா ? ! ?

குப்பைத்தொட்டியில் என்ன பெரியதாக
கற்றுக் கொள்ள இருக்கிறதென்று யோசிக்கிறாயா ?

கற்றுக் கொடுக்காத பொருள்களே
உலகத்தில் இல்லை !

கற்றுக் கொள்ள உனக்கு
ஆசையிருந்தால் எதிலிருந்தும்,
பலவற்றையும் கற்றுக் கொள்ளலாம் !

எந்த ஒரு பொருளையும்,
இழிவாக, உபயோகமில்லாததாக ஒரு பொழுதும்
நினைக்கவே நினைக்காதே !

சரி ! இப்போதைக்கு நாம்
குப்பைத் தொட்டியினால்
கிடைத்தப் பாடங்களை கற்றுக்கொள்ளலாம் !

தேவையில்லாததை சேகரித்து,
மற்ற இடங்களை சுத்தமாக வைப்பதில்,
குப்பைத்தொட்டிக்கு சமானம் குப்பைத் தொட்டியே !

வாழ்க்கையில் தேவையில்லாததை
தனியாக எடுத்துப் பிரித்து விட்டாலே
வாழ்க்கை மிகவும் நிம்மதியாக
இருக்கும்!

இது நான் குப்பைத் தொட்டியிடமிருந்து
கற்ற முதல் பாடம் !

தான் குப்பையைத் தான் சேகரிக்கிறோம் என்ற அலட்சியம் இல்லாத,

தாழ்வு மனப்பான்மை இல்லாத,

அசிரத்தையில்லாத ஒன்று
குப்பைத்தொட்டி !

நம் கடமை அடுத்தவருக்குக்
கேவலமாகத் தெரிந்தாலும்,

நாம் அதிலிருந்து நழுவாமல்,முழு மனதோடு,
வெறுப்பில்லாமல் அதில் ஈடுபட வேண்டும் !

இது நான் குப்பைத் தொட்டியிடமிருந்து
கற்ற இரண்டாவது பாடம் !

படித்தவன்,படிக்காதவன்,வயதானவர், இளையவர்,
ஆண்,பெண்,
பணக்காரன்,ஏழை,
என்ற எந்த பாகுபாடும்
பார்க்காத ஒன்று குப்பைத்தொட்டி !

யார் எதுவாக இருந்தாலும்,
எப்படியிருந்தாலும், நீ
என்றும் மாறாதிரு !

இது நான் குப்பைத் தொட்டியிடமிருந்து
கற்ற மூன்றாவது பாடம் !

ஏதோ ஒரு மூலையில்,
யாரும் மதிக்காமல் இழிவாகக்
கிடந்தாலும்,

அவரவர்க்கு தேவையான
சமயத்தில் தன் பக்கம் அவர்களை
வரவைக்கும்,

தன் கடமையைச் செய்யும் ஒரு கர்மவீரன் குப்பைத்தொட்டி !

நீ உன்னுடைய கடமையை
செய்து கொண்டு ஒதுங்கி இரு!

தானாகவே உன்னைத் தேடி உலகம் வந்தே தீரும் !

இது குப்பைத் தொட்டியிடமிருந்து
நான் கற்ற 4வது பாடம் !

தனக்கென்று ஒதுக்கப்பட்ட
இடத்தைப் பற்றி கவலைப்படாமல்,

தன்னிடத்தை அவமதிக்காமல்
இருப்பது குப்பைத்தொட்டி !

உனக்கென்று பகவான் கொடுத்த இடத்தை ஒரு நாளும் நீ
கேவலப்படுத்தாமல்,

உன் வாழ்க்கையில்
நிம்மதியாய் வாழ்ந்து வா !

இது குப்பைத் தொட்டியிடமிருந்து
நான் கற்ற 5 வது பாடம் !

இன்னும் பல பாடங்களைக்
குப்பைத்தொட்டி
எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது !

அதை எல்லாம் நான் உனக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை !

எப்பொழுதும் அடுத்தவர் முதுகில்
பயணம் செய்யாதே !

அப்படிச் செய்தால் உன்னை சுலபமாகக் கீழே தள்ளிவிடலாம் !

உன் முயற்சியில் வாழக் கற்றுக் கொள் !

உன் முயற்சியே உனக்கு சந்தோஷம்!

நீ சிரத்தையோடு பார்த்தால்
எல்லாவற்றிலும் பாடம் கற்றுக் கொள்ளலாம் !

நீ சிரத்தையோடு பார் !

நீ கற்றுக்கொள் !

உன் மனம் குப்பைத் தொட்டியில்லை !

தேவையில்லாததை வைத்துக் கொள்ளாதே !

உன் வாழ்க்கை குப்பைத் தொட்டியில்லை !

தேவையில்லாதவற்றை சேகரிக்காதே !

உன் நேரம் குப்பைத் தொட்டியில்லை !

வீணான விஷயங்களை செய்யாதே !

தினமும் இனி நீ செய்ய வேண்டியது

காலையில் எழுந்தவுடன்

உன் அகம்பாவத்தைக்
குப்பைத்தொட்டியில் வீசி எறி

உன் சுயநலத்தை
குப்பைத் தொட்டியில் வீசி எறி

உன் திமிரைக்
குப்பைத் தொட்டியில் வீசி எறி

உன் சந்தேகத்தைக்
குப்பைத் தொட்டியில் வீசி எறி

உன் இயலாமையை
குப்பைத்தொட்டியில் வீசி எறி

உன் துக்கத்தை
குப்பைத்தொட்டியில் வீசி எறி

உன் பைத்தியக்காரத்தனத்தை
குப்பைத் தொட்டியில் வீசி எறி

உன் சோம்பேறித்தனத்தை
குப்பைத்தொட்டியில் வீசி எறி

உன் முட்டாள்தனத்தை
குப்பைத்தொட்டியில் வீசி எறி

உன் பேராசையை
குப்பைத்தொட்டியில் வீசி எறி

உன் பொறாமையைக்
குப்பைத்தொட்டியில் வீசி எறி

உன் பயங்களைக்
குப்பைத்தொட்டியில் வீசி எறி

உன் அழுக்கை
குப்பைத்தொட்டியில் வீசி எறி

உன் காமத்தைக்
குப்பைத்தொட்டியில் வீசி எறி

உன் அழுகையைக்
குப்பைத்தொட்டியில் வீசி எறி

உன் பாவங்களைக்
குப்பைத்தொட்டியில் வீசி எறி

உன் குழப்பங்களை
குப்பைத்தொட்டியில் வீசி எறி

உன்னிடம் தேவையில்லாமலிருக்கும்
அனைத்தவற்றையும்
குப்பைத்தொட்டியில் வீசி எறி

உன் மனதில்
எப்பொழுதெல்லாம்
தேவையில்லாதவைகள்
தோன்றுகின்றதோ….

உடனே அவற்றையெல்லாம்
குப்பைத்தொட்டியில் வீசி எறி

வீசிப்பார்…. !!! மனம் சமாதானமடையும்.

advertisement by google

Related Articles

Back to top button