இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பக்திபயனுள்ள தகவல்மருத்துவம்விளையாட்டு

முக்கிய செய்திகள் 31.10.2019

advertisement by google

விண்மீண்நியூஸ்4: ?? சினிமாவுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியில் குறைபாடுகளை நீக்க நிதி அமைச்சருடன் ஃபெஃப்சி தலைவர் சந்திப்பு

advertisement by google

டெல்லி: சினிமாவுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியில் குறைபாடுகளை நீக்க நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து ஃபெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் திரைப்பட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர்.

advertisement by google

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ?? திண்டிவனம் மற்றும் தஞ்சையில் கன மழை

advertisement by google

திண்டிவனம்: திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

advertisement by google

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ?? ஹிமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம்

advertisement by google

ஹிமாச்சல பிரதேசம்: ஹிமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4ஆக பதிவாகியுள்ளது. இதனால் வீடுகள் அதிர்ந்தன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடி தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

advertisement by google

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ?? பரவை முனியம்மா தற்போது நலமுடன் உள்ளதாக உறவினர்கள் தகவல்

advertisement by google

மதுரை: பரவை முனியம்மா தற்போது நலமுடன் உள்ளதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மூச்சு திணறல் காரணமாக நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ?? நாமக்கல் மாவட்டத்தில் கொத்தடிமைகளாக இருந்த 37 பேர் மீட்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் போடிநாயக்கன்பட்டியில் உள்ள செங்கல்சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 37 பேர் மீட்கப்பட்டுள்ளது. 5 குழந்தைகள் உட்பட 37 பேரையும் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மீட்டார்.

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ?? ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரம் கடத்தல்: வன அதிகாரி உள்பட 10 பேர் கைது

ஆந்திரா: ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரம் கடத்தலுக்கு துணையாக இருந்த வன அதிகாரி உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செம்மரம் கடத்தலுக்கு உதவிய வனத்துறை கண்காணிப்பாகர் சிக்குருநாயக் கைது செய்யப்பட்டார்.

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ??சிவகங்கை, நாகை, தூத்துக்குடி, திருச்சி, கோவையில் என்.ஐ.ஏ நடத்திய சோதனையில் 8 செல்போன்கள், 2 லேப்டாப், 5 சிம் கார்டுகள், 14 ஆவணங்களை பறிமுதல்

??பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் – என்.ஐ.ஏ

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ?? பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 400 கன அடி நீர் திறப்பு

சென்னை: சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 400 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ?? அரசு மருத்துவர்களின் போராட்டத்தில் எந்த அரசியலும் இல்லை: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

சென்னை: அரசு மருத்துவர்களின் போராட்டத்தில் எந்த அரசியலும் இல்லை என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார். இந்நிலையில் அரசு மருத்துவர்களின் போராட்டம் போலியானது அல்ல என்பதை உணர்ந்து கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ?? விளை நிலங்கள் வழியே உயர்மின் கோபுரங்கள்: நவம்பர் 18-ம் தேதி சாலை மறியலில் ஈடுப்படபோவதாக விவசாயிகள் தீர்மானம்

பவானி: விளை நிலங்கள் வழியே உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிடக்கோரி ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நவம்பர் 18-ம் தேதி சாலை மறியலில் ஈடுப்படபோவதாக தெரிவிக்கப்பட்டள்ளது. பவானியில் நடைபெற்ற விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?? ஓமலூர் ஒன்றியத்தில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக மாறும் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள்

ஓமலூர், அக்.31: ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள 33 கிராம ஊராட்சிகளில், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ஆங்காங்கே ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டது. அதில் இருந்து மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றியும், ஆழ்துளை கிணறுகளின் அருகில் சிறிய பிளாஸ்டிக் தொட்டிகளை வைத்தும் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக, ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை பெய்யவில்லை. இதனால் கடும் வறட்சி ஏற்பட்டு, அனைத்து நீர்நிலைகளும் வறண்டன. நிலத்தடி நீர்மட்டம் சரிந்ததால், விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள், சாலையோரம் அமைக்கப்பட்டு இருந்த நூற்றுக்கணக்கான ஆழ்துளை கிணறுகள் தண்ணீரின்றி வறண்டு விட்டன.

இதனிடையே, தமிழக அரசின் உத்தரவை அடுத்து, ஓமலூர் வட்டாரத்தில் நீர்நிலைகள் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டன. மேலும், ஓமலூர் ஒன்றிய அதிகாரிகள், பழைய பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், மணப்பாறையில் குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்தான். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுபடி, பயன்பாடற்ற திறந்தவெளி ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளாக மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வெள்ளக்கல்பட்டிகிராமத்தில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளாக அதிகாரிகள் மாற்றியுள்ளனர். மற்ற ஊராட்சிகளிலும் இப்பணி மேற்கொள்ளப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?? தொடர் மழையால் கொடியிலேயே அழுகும் பாகற்காய்

சேலம், அக்.31: தொடர் மழை காரணமாக கொடியிலேயே பாகற்காய் அழுகி வருவதால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் மன்னார்பாளையம், வலசையூர், ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், மேச்சேரி உள்பட பல பகுதிகளில் பாகற்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் பாகற்காய் சேலம் உள்பட நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. சேலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பாகற்காய் கொடிகள் அழுகி வருகின்றன. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பாகற்காய் கொடிகளுக்கு அதிகளவு மழை பொழிவும், அதிக வெப்பமும் இருக்கக்கூடாது. சேலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பாகற்காய் கொடிகள் அழுகி வருகின்றன. இதன் காரணமாக விளைச்சல் கணிசமாக குறைந்துள்ளது. இந்த சீசனில் பாகற்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளது,’ என்றனர்.

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?? மெய்யனூர் பகுதி திமுக செயலாளர் இல்ல திருமணம்

சேலம், அக்.31: சேலம் மெய்யனூர் பகுதி திமுக செயலாளரும், சூரமங்கலம் மண்டல குழு முன்னாள் தலைவருமான சக்கரை சரவணனின் இல்ல திருமணம் சேலத்தில் நாளை நடக்கிறது. சேலம் மத்திய மாவட்ட மெய்யனூர் பகுதி திமுக செயலாளரும், சூரமங்கலம் மண்டல குழு முன்னாள் தலைவருமான சக்கரை சரவணன்- சுஜாதா ஆகியோரது மகள் சவுந்தர்யாவுக்கும், பனங்காடு ஆண்டிப்பட்டி ஈஸ்வரன்- புனிதா ஆகியோரது மகன் சதீசுக்கும், திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவர்களது திருமணம் நாளை(1ம்தேதி) காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள், சேலம் இரும்பாலை மெயின்ரோடு எம்.எஸ்.வி.திருமண மஹாலில் நடக்கிறது. சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான ராஜேந்திரன் தலைமை தாங்கி, திருமணத்தை நடத்தி வைக்கிறார். இந்த விழாவில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர். முன்னதாக இன்று(31ம்தேதி) இரவு 7 மணிக்கு பெண் அழைப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதைத் தொடர்ந்து இன்னிசையும், விருந்து நிகழ்ச்சியும் நடக்கிறது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை மணமக்கள் வீட்டார் செய்து வருகின்றனர்.

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?? சேலம் ரயில்வே கோட்டத்தில் கண்காணிப்பு வார விழா

சேலம், அக்.31: சேலம் ரயில்வே கோட்டத்தில் கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழா நடந்தது. சேலம் ரயில்வே கோட்டத்தில் கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழா, கடந்த 28ம்தேதி தொடங்கியது. இந்த விழா நவம்பர் 2ம் தேதி வரை நடக்கிறது. கடந்த 28ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் தலைமையில் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட முக்கியரயில் நிலையங்கள், பணிமனைகள் உள்ளிட்டவைகளிலும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. ஊழல் உள்ளிட்டவைகளை முற்றிலும் தடுக்கும் வகையில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, கருத்தரங்கங்கள், பயணச்சீட்டு சோதனை, புகார்தாரர் குறை தீர்க்கும் முகாம், பள்ளி, கல்லூரி மற்றும் ரயில்வே ஊழியர்களுக்கான பல்வேறு போட்டிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிக்ள நடத்தப்பட்டது.

இதை தொடர்ந்து, சேலம் ரயில்வே கோட்டம் சார்பில், நேற்று ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு குறித்து நடைபயணம் நிகழ்ச்சி நடந்தது. இதனை கோட்ட மேலாளர் சுப்பாராவ் தொடங்கி வைத்தார். இந்த நடைபயணம், ரயில்வே கோட்ட அலுவலகம் முதல் தொடங்கி சேலம் ரயில் நிலையம் வரை நடந்தது. இதில், கூடுதல் கோட்ட மேலாளர் அண்ணாதுரை, முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன், கோட்ட பணியாளர் நல அலுவலர் திருமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும், ஊழல் கண்காணிப்பு முக்கியத்துவம் குறித்து, ரயில்வே ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?? வீராணம் அருகே டூவீலர் மோதி பெண் பலி

சேலம், அக்.31: சேலத்தில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டியின் கால், விபத்தில் சிக்கி முறிந்தது. மேலும் மற்றொரு விபத்தில் பெண் பலியானார். சேலம் திருவாக்கவுண்டனூர் வசந்தம் நகரை சேர்ந்தவர் வெள்ளையம்மாள் (80). இவர் நேற்று காலை அஸ்தம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு பேருந்தில் சென்றுள்ளார். அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் இறங்கி சாலையை கடக்க முயன்ற போது, அவ்வழியே வந்த பால் லாரி,வெள்ளையம்மாள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் அவரது 2 கால்களும் லாரி சக்கரத்தில் சிக்கி நசுங்கியது. வலியில் துடித்து கொண்டிருந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், சேலம் அல்லிக்குட்டை சொட்டையன்கவுண்டர் தெருவை சேர்ந்தவர் கமலா (65). இவர் நேற்றுமுன்தினம் மாலை, மன்னார்பாளையம் பிரிவு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவ்வழியே வந்த டூவீலர் மீது தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த கமலாவை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?? இடைப்பாடியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

இடைப்பாடி, அக். 31: இடைப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை (1ம் தேதி) காலை 11 மணிக்கு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு செயற்பொறியாளர் செல்வம் தலைமை வகிக்கிறார். இந்த கூட்டத்தில், இடைப்பாடி கோட்டத்திற்குட்பட்ட இடைப்பாடி, சித்தூர், பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, தேவூர், கொங்கணாபுரம், கன்னந்தோரி, மகுடஞ்சாவடி, ஜலகண்டாபுரம் புறநகர், வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளை சேர்ந்த மின்நுகர்வோர்கள், தங்களது மின்சாரம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?? மகாராஷ்டிராவில் இருந்து சேலத்திற்கு 100 டன் பெரிய வெங்காயம் வரத்து

சேலம், அக்.31: மகாராஷ்டிராவில் பெரிய வெங்காயம் விளைச்சல் அதிகரித்துள்ளதால், அங்கிருந்து சேலத்திற்கு தினசரி 100 டன் பெரிய வெங்காயம் வருவதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகாவில் தான் பெரிய வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து இந்தியா முழுவதும் பெரிய வெங்காயம் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழையால் மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பெரியவெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக வரத்து சரிந்தது. இதனையடுத்து, ஒரு கிலோ பெரிய வெங்காயம் 30 முதல் 60 வரை உயர்ந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மகாராஷ்டிராவில் பெரிய வெங்காயம் விளைச்சல் சற்று அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, அங்கிருந்து சேலத்திற்கு வரத்து அதிகரித்துள்ளது. கடந்த மாதம் நாள் ஒன்றுக்கு 40 முதல் 60 டன்னாக இருந்த வெங்காயம், சில நாட்களாக 100 டன்னாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலை கணிசமாக குறைந்துள்ளது. தற்போது பெரிய வெங்காயத்தில் சிறிய அளவு வெங்காயம் கிலோ (மொத்த விலையில்) 20 முதல் 25 எனவும், பெரிய அளவுள்ள வெங்காயம் 35 முதல் 40 என விற்பனை செய்யப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

பதுக்கல் காரணமா?

பெரிய வெங்காயம் விளைச்சல் சரிந்த காரணத்தால், வட மாநிலங்களில் குடோன்களில் மொத்த வியாபாரிகள் பதுக்கி வைத்து இருக்கிறார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, வட மாநிலங்களில் உள்ள குடோன்களை ஆய்வு செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஆய்வு செய்தால் குறைந்தபட்சம் 20 முதல் 30 சதவீதம் பெரிய வெங்காயம் வெளியே வர வாய்ப்புள்ளது. இதனால் பெரிய வெங்காயத்தின் விலை சரிய வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?? இடைப்பாடி புதன்சந்தையில் 20 லட்சத்துக்கு காய்கறி விற்பனை

இடைப்பாடி, அக்.31: இடைப்பாடி புதன்சந்தையில் நேற்று 20 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையானது. இடைப்பாடியில் வாரந்தோறும் புதன்கிழமை சந்தை கூடுகிறது. சேலம் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். நேற்று கூடிய சந்தைக்கு, விவசாயிகள் 50 டன் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஆடுகள் விற்பனைக்கு வரவில்லை. சேவல் மற்றும் நாட்டுக்கோழிகள் என 1,500 விற்பனைக்கு வந்திருந்தது. சந்தையில் கேரட் ஒரு கிலோ 35 முதல் 75 வரையும், பீட்டூட் 40, முட்டைகோஸ் 20, முள்ளங்கி 25, தக்காளி 25, பெரிய வெங்காயம் 30, சின்னவெங்காயம் 30 வரையும், இஞ்சி 80க்கும், சேவல் 250 முதல் 750 வரையும், ேகாழி 100 முதல் 600 வரையும் விற்பனையானது. வழக்கமாக சந்தைக்கு 90 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். நேற்றைய சந்தைக்கு 50 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தது. நேற்று சந்தையில் 20 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?? நரசிங்கபுரத்தில் வளர் இளம்பெண்களின் கல்வி நிலை குறித்த கருத்தரங்கம்

ஆத்தூர், அக்.31: நரசிங்கபுரத்தில், ஆத்தூர் ஒன்றிய அளவிலான பெண் குழந்தைகள் மற்றும் வளர் இளம்பெண்களின் கல்வி நிலை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. நரசிங்கபுரம் விநாயகபுரத்தில், ஆத்தூர் ஒன்றிய அளவிலான பெண் குழந்தைகள் மற்றும் வளர் இளம்பெண்களின் கல்விநிலை குறித்த கருத்தரங்கம் நடந்தது. திருப்பூர் மக்கள் அமைப்பு மோகன்குமார் தலைமை வகித்தார். பவர் டிரஸ்ட் இயக்குனர் ஜெகதாம்மாள் வரவேற்று பேசினார். மாநில ஒருங்கிணைப்பாளர் மெல்வின் கருத்தரங்கின் நோக்கவுரையாற்றினார். இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தை தொழிலாளர்களையும் மீட்டு, அவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் வளர் இளம்பெண்கள், தாய்மார்கள், குழந்தைகளுக்கு தரமான ஊட்டச்சத்து வழங்க வேண்டும். பராம்பரிய உணவு வகைகள் பள்ளிகள், அங்கன்வாடி மையம், ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும்.

பெண் கருக்கொலைகளுக்கு துணை போகும் மருத்துவமனைகளை கண்டறிந்து, ஸ்கேன் மையங்களை தடை செய்ய வேண்டும். சிறுவயது திருமணங்களை தடுத்து நிறுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் விஜயா, அன்பழகன், கார்த்திகா, நிர்மலா, ராமு, டாக்டர் கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கலைமணி நன்றி கூறினார்.

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?? ஆத்தூர் நகராட்சியில் பழைய இரும்பு கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

ஆத்தூர், அக்.31:ஆத்தூர் அருகே உடையார்பாளையம் பகுதியில் உள்ள கடைகளில் நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் திருமூர்த்தி தலைமையில் நேற்ற ஆய்வு மேற்கொண்டனர். ஆத்தூர் உடையார்பாளையம் காமராஜனார் சாலை, வீரகனூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடைகளில், நேற்று நகராட்சி சுகாதார அலுவலர் திருமூர்த்தி தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் பிரபாகரன், செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது உடையார்பாளையம் பகுதியில், தங்கவேல் என்பவரது பழைய இரும்பு கடை, சுகாதாரமற்ற முறையில் பாதுகாப்பின்றி இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு நகராட்சி அலுவலர்கள் 5 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், கடையை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என எச்சரிக்கை செய்தனர். தொடர்ந்து அருகில் இருந்த உணவு விடுதியில் ஆய்வு நடத்திய அதிகாரிகள், அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து பிளாஸ்டிக் பைகளை கவர்கள் பறிமுதல் செய்த அதிகாரிகள், விடுதி உரிமையாளரிடம் 1000 அபராதம் வசூலித்தனர்.

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?? 4 ஆண்டுகளுக்கு பிறகு சங்ககிரி கிளைச்சிறை திறப்பு

சேலம், அக். 31: சேலம் சங்ககிரியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு கிளைச்சிறை நேற்று திறக்கப்பட்டது. இன்று முதல் கைதிகள் இச்சிறையில் அடைக்கப்படுகிறார்கள். சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரியில் மத்திய சிறை உள்பட 14 கிளைச்சிறைகள் உள்ளது. இச்சிறைகளில் 1200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சங்ககிரி கிளைச்சிறை பாஸ்டல் பள்ளி சிறையாக செயல்பட்டு வந்தது. 18, 19வயதிற்குட் பட்ட சிறுவர்கள் இச்சிறையில் அடைக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையின் போது, சிறையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. 50 அடி அளவுக்கு சேதம் ஏற்பட்டது. இதையடுத்து இந்த சிறையில் இருந்த கைதிகள், சேலம் மற்றும் திருச்செங்கோடு சிறைக்கு மாற்றப்பட்டனர். இங்கு பணியாற்றிய வார்டர்கள் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

4 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த சிறையின் சுற்றுச்சுவர் சமீபத்தில் பணி முடிந்து திறப்பு விழாவுக்காக காத்திருந்தது. இதுகுறித்து சென்னை சிறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அனுமதி கிடைத்த நிலையில், நேற்று சங்ககிரி சிறையின் திறப்பு விழா நடந்தது. சங்ககிரி சார்பு நீதிபதி மேகலா மைதிலி, சிறையை திறந்து வைத்தார். நீதிபதி பாக்கியம், நீதித்துறை நடுவர்கள் சுந்தர்ராஜன், உமாமகேஷ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். இன்று முதல் சங்ககிரி பகுதியில் கைது செய்யப்படும் கைதிகள் இச்சிறையில் அடைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ?சேலம் மாவட்ட செய்திகள்?

??சாதக, பாதகங்களை அரசு ஆய்வு செய்யவேண்டும் விவசாயத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒப்பந்த சாகுபடி சட்டம்

சேலம், அக். 31: தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டம் விவசாயத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் அபாயம் கொண்டது. எனவே இந்த சட்டம் குறித்து விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிந்த பிறகு, செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக அரசு, தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்குதல்) சட்டம், 2019 என்ற சட்டத்தை இயற்றியுள்ளது. இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். ‘‘தமிழக விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க தமிழ்நாடு அரசு முக்கிய கொள்கை முடிவுகளை வகுத்துள்ளதோடு, புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறது. ஒப்பந்த சாகுபடி முறை, பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தபோதிலும், ஒப்பந்த சாகுபடியில் பங்கு பெறும் விவசாயிகளின் நலனை பாதுகாப்பதற்கான சட்டம் எதுவும் நடைமுறையில் இல்லை. அதற்கான சட்டம் இயற்ற 2018-2019ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியானது.

கடந்த 14.2.2019 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு தற்போது குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதல் பெறப்பட்டு, சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது,’’ என்று அரசு அறிவித்துள்ளது. இந்த சட்டத்தின்படி, கொள்முதலாளர் அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும் விவசாயிகள் அல்லது உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தங்களது விளைபொருட்கள் அல்லது கால்நடைகள் அல்லது அதிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை, ஒப்பந்தம் செய்த அன்று நிர்ணயம் செய்த விலையிலேயே பரிமாற்றம் செய்வதற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும்,’’ என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த சட்டம் விவசாயத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் அபாயம் கொண்டது என்று விவசாய சங்கங்கள் கடும் அதிருப்தி ெதரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக விவசாய சங்கங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் தெய்வசிகாமணி கூறியதாவது: ஒரு விவசாயி, தனது நிலத்தில் பயிரை விதைக்கும் போதே, ஒரு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, அறுவடை செய்து, அந்த நிறுவனத்திற்கே வழங்க வேண்டும் என்பது இந்த சட்டத்தின் முக்கிய அம்சம். ஒப்பந்த நாளில் உள்ள சந்தை நிலவரத்தின் படி, என்னவிலை நிர்ணயிக்கப்படுகிறதோ, அந்த விலையே அறுவடையின் போது வழங்கப்படும். இப்படி வாங்கும் நிறுவனங்கள் தனித்துவம் பெற்றவையாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியம். இதனால் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் மட்டுமே விவசாயிகள் ஒப்பந்தம் செய்து ெகாள்ள முடியும். இதே போல் விளைபொருட்களை அவர்களுக்கு கொடுத்த 14நாட்களுக்கு பிறகே அதற்குரிய விலை கிடைக்கும் என்பதும் அபத்தமானது. ஏற்கனவே தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பை வழங்கி விட்டு விவசாயிகள் கடன்பாக்கியால் தத்தளித்து நிற்கின்றனர். இதில் இதர விளைபொருட்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுவிட்டு சாகுபடி செய்தால், விபரீதங்களே அதிகமாகும். எனவே இந்த சட்டம் குறித்து விவசாயிகளிடம் முழுமையாக கருத்து ேகட்பு நடத்தி, சாதக, பாதகங்களை ஆய்வு செய்து நிறைவேற்ற அரசு, முன்வரவேண்டும். இவ்வாறு தெய்வசிகாமணி கூறினார்.

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?? 3,545 டன் காய்கறி, ஜவுளி உள்ளிட்டவற்றை பார்சல் மூலம் அனுப்பியதில் ரயில்வேக்கு 1.36கோடி வருவாய்

சேலம், அக்.31: சேலம் ரயில்வே கோட்டம் வழியாக தினமும் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில் என 140க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலம் கோட்டத்தில் உள்ள 32 ரயில் நிலையங்களில், பார்சல் பதிவு சேவை நடந்து வருகிறது. வாடிக்கையாளர்கள், 100கிலோ முதல் பொருட்களை அனுப்புலாம். சேலம் கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் இருந்து காட்டன், காய்கறிகள், கொசுவலைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறன. கடந்த மாதம், சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட ஈரோடு ரயில் நிலையத்தில் காய்கறிகள், ஜவுளி, கோவையில் இருந்து காய்கறிகள், ஜவுளி, கரூரில் இருந்து கொசுவலை என மொத்தம் 3,545டன் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், வெளிமாநிலங்களில் இருந்து சேலம், நாமக்கல் ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கிய உரம் சிமெண்ட், கோதுமை ஆகியவை தனியார் நிறுவன குடோன்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘சேலம் கோட்டத்தில் இருந்து கடந்த மாதம் 3,545 டன் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. அதன் மூலம் 1.36 கோடி வருவாய் கிடைத்துள்ளது. தொடர்ந்து வாடிக்கையாளர்கள் ரயில்களில் பார்சல்களை அனுப்பினால், விரைவான நேரத்தில், பார்சல்கள் டெலிவரி செய்யப்படும்,’ என்றனர்.

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?? மாவட்டத்தில் பரவலாக மழை

சேலம், அக்.31:வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால், தமிழகம் முழுவதும் நேற்றுமுன்தினம் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிக மழை பொழிவு இருக்கிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென், வட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம், நேற்றும் பெய்த மழையால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மலைப்பகுதிகளில் மழைநீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கிணறு, போர் வெல்களில் நிலத்தடி நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலத்தில் நேற்று பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: காடையாம்பட்டி 46, ஏற்காடு 43, கரியகோவில் 38, வாழப்பாடி 30, மேட்டூர் 24.4, பெத்தநாயக்கன்பாளையம் 24, ஆத்தூர் 23.4, ஆணைமடுவு 20, ஓமலூர் 19.3, கெங்கவல்லி 17.4, சேலம் 14.5, வீரகனூர் 14, தம்மம்பட்டி 13, சங்ககிரி 10, எடப்பாடி 8 என மழை பதிவாகியுள்ளது.

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ?? சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.29,568-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.3,696-க்கும், ஒரு சவரன் ரூ.29,568-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?? ஆழ்துளை கிணறு தோண்டும்போது போர்வெல் உரிமையாளர்கள் கோர்ட் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்

சேலம், அக்.31:சேலம் மாவட்டத்தில் உள்ள பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்த கலெக்டர் ராமன் பேசியதாவது:சேலம் மாவட்டத்தில் பயன்பாடற்ற, தூர்ந்துபோன, கைவிடப்பட்ட மற்றும் தற்காலிகமாக பழுதடைந்துள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் உடனடியாக பாதுகாப்பான முறையில் மூட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போர்வெல் உரிமையாளர்கள் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி, அரசின் உரிய அனுமதி பெற்ற பிறகு மட்டுமே, ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.மாவட்டத்தில் தனியார் தோட்டங்கள் மற்றும் நிலங்கள், அரசுக்கு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்களில், பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் இருந்தால், அதனை சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும்.

தனியாரால் நிறுவப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருப்பது தெரிந்தால், கடுமையான அபராதம் விதிக்கப்படுவதுடன், காவல்துறை மூலமும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இதேபோல், அரசுத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் ஏதேனும் பாதுகாப்பான முறையில் மூடப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கு பொறுப்பான அனைத்து அலுவலர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சேலம் மாவட்டத்தில் இதுவரை 5,563 பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் பாதுகாப்பான முறைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், அந்தந்த துறை அலுவலர்கள் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ள பயனற்ற ஆழ்துளை கிணறுகள் தொடர்பான புகார்களை, 1077 என்ற கட்டணமில்லா எண்ணிற்கோ அல்லது மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவின் வாட்ஸ்அப் எண் 98943-45542 என்ற எண்ணிற்கோ உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் ராமன் தெரிவித்தார்.கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் போர்வெல் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ?? மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர உத்தரவிடக் கோரிய வழக்கு: நாளை விசாரணை

சென்னை: மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர உத்தரவிடக் கோரிய வழக்கு ஐகோர்ட்டில் நாளை விசாரணை நடைபெற உள்ளது. வழக்கறிஞர் சூர்யபிரகாசம் தாக்கல் செய்த மனு நாளை விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் வழக்கறிஞர் சூர்யபிரகாசம் கோரிக்கை வைத்திருந்தார்.

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ??திருச்சியில் கூடியது காவிரி ஒழுங்காற்று குழு

டெல்லி மற்றும் பெங்களூருவில் இதுவரை காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், முதல் முறையாக தமிழகத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில், காவிரி ஒழுங்காற்று குழு தலைவரும், மத்திய நீர்வளத்துறை செயலாளருமான நவீன்குமார் தலைமையில், அதிகாரிகள் 16 பேர் பங்கேற்றுள்ளனர்.

காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் மாலை, 4 மணி வரை நடைபெறுகிறது.

தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீர், பருவ மழைப் பொழிவு, அணைகளில் நீர் இருப்பு உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படுகிறது.

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ?? நாகூரை சேர்ந்த முகமது அஜ்மலிடம் 6 மணி நேரத்திற்கு மேலாக நடந்த என்ஐஏ விசாரணை நிறைவு

நாகை: நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்த முகமது அஜ்மலிடம் 6 மணி நேரத்திற்கு மேலாக நடந்த என்ஐஏ விசாரணை நிறைவு பெற்றது. மேலும் நாளை காலை சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராக முகமது அஜ்மலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ?? தீவிர புயலாக மாறியது அரபிக் கடலில் நிலைக்கொண்டுள்ள மகா புயல்

டெல்லி: அரபிக் கடலில் நிலைக்கொண்டுள்ள மஹா புயல் தீவிர புயலாக மாறியது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. நவ.4ஆம் தேதி வரை அரபிக் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ??செங்கல்பட்டு : மின்சார ரயிலில் கேட்பாரற்று கிடந்த பச்சிளம் குழந்தை

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் இருந்து, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டது.

செங்கற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள இந்த பச்சிளம் குழந்தை, தற்போது நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ??ஹெல்மெட் அணியாமல் சென்ற வழக்கறிஞரை தாக்கிய காவலர்கள்: மன்னிப்புக் கடிதம் வழங்க வேண்டும் – உயர்நீதிமன்ற கிளை

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ??சுஜித் மீட்பு பணி குறித்து ஸ்டாலின் விமர்சனம் செய்தது சிறுவன் மீதான அக்கறையால்தான், அரசியல் செய்வதற்கு இல்லை – டி.கே.எஸ்.இளங்கோவன்

??4 நாட்களாக ஸ்டாலின் அங்கு செல்லாமல் இருந்ததே அரசியல் ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான், அதன்பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லை என்றதால்தான் ஸ்டாலின் நேரில் சென்று பார்த்தார் – டி.கே.எஸ்.இளங்கோவன்

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ??சைலேந்திர பாபுவிற்கு கூடுதல் பொறுப்பு
தீயணைப்புத்துறை டிஜிபி காந்தி ராஜன் ஒய்வுபெறுவதையொட்டி ரயில்வே டிஜிபி
சைலேந்திர பாபு ஐ பி எஸ் தீயணைப்புத்துறையையும் கூடுதலாக கவனிப்பார்.

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: ??ஹெல்மெட் அணியவில்லை என போக்குவரத்து காவல்துறை தடுத்தால் உரிய அபராதத்தை செலுத்த வேண்டும்

??பணம் இல்லையெனில் ரசீதைப் பெற்றுக்கொண்டு பிறகு அபராதம் செலுத்தலாம்

??ஹெல்மெட் அணியாமல் சென்ற வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் உயர்நீதிமன்ற கிளை கருத்து

??ஊடகதளம்
[10/31, 5:45 PM] விண்மீண்நியூஸ்4: JUSTIN

?? ’வழக்கறிஞர்கள், காவலர்கள் நண்பர்களாக இருங்கள்’

??ஹெல்மெட் அணியாமல் சென்ற விவகாரத்தில் தாக்கப்பட்ட வழக்கறிஞருக்கு ரூ.1,001 வழங்கவும், வழக்கறிஞருக்கு மன்னிப்பு கடிதம் அளிக்கவும் தலைமை காவலர்கள் இருவருக்கு உத்தரவு

உயர்நீதிமன்ற கிளை

? winmeennews.com?ஊடகதளம்

advertisement by google

Related Articles

Back to top button