கிரைம்

குடும்பமே உட்கார்ந்து பேசி மேயர் உமாமகேஷ்வரியை கொன்றோம் அதிரவைத்த சன்னியாசி

advertisement by google

குடும்பமே உட்கார்ந்து பேசி.. கூலிப்படையை ஏவி.. உமா மகேஸ்வரியை கொன்றோம்.. அதிர வைத்த சன்னியாசி.

advertisement by google

உமா மகேஸ்வரி கொலை வழக்கு.. வெளியான சிசிடிவி காட்சி-வீடியோ
திருச்சி: “உமா மகேஸ்வரி இருக்கிற வரைக்கும் எங்களால வளர முடியாது.. அதனால கூலிப்படையினருடன் குடும்பமே உட்கார்ந்து பேசி.. அப்பறம்தான் இந்த கொலையை செய்தோம்” என்று சீனியம்மாள் கணவர் சன்னியாசி வாக்குமூலம் அளித்துள்ளார்.

advertisement by google

கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர், வீட்டு வேலைக்கார பெண் என 3 பேரும் கொல்லப்பட்டனர். நடந்த இந்த கொலையே ரொம்ப பயங்கரமாக இருந்தது.
உமா மகேஸ்வரி கழுத்தில் 6 இன்ச் அளவுக்கு கத்தியால் குத்தி கிழிக்கப்பட்டு இருந்தது. கணவரின் உடம்பெல்லாம் எண்ணவே முடியாத அளவுக்கு கத்தி குத்துகள். ஆளுக்கு ஒரு ரூமில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர்.

advertisement by google

மறுப்பு
இது சம்பந்தமான விசாரணையில், திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் பெயர் துவக்கத்திலேயே அடிபட ஆரம்பித்தது. ஆனால் அதனை அவர் உடனடியாக மறுத்தார். “உமா மகேஸ்வரி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், நான் மாநில துணை செயலாளர்.. அவருகிட்ட போய் நான் நிக்கணும்னு எனக்கு அவசியம் இல்லை. அதனால உண்மையான குற்றவாளியை மட்டும் தப்ப விட்டுடாதீங்க” என்று கூறினார்.

advertisement by google

கார்த்திகேயன்
ஆனால் இப்படி சீனியம்மாள் சொல்லிய மறுநாளே, வழக்கில் அதிரடி திருப்பமாக அவரது மகன் கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் 3 பேரையும் கொன்றது தான் தான் என்று சொல்லி இருந்தார். இந்நிலையில், உமாமகேஸ்வரி கொலை வழக்கில் சீனியம்மாளையும், கணவர் சன்னாசியையும் சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர்.

advertisement by google

பெட்டிக்கடை
ஜெயிலில் உள்ள கார்த்திகேயனை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில்தான் நேற்று சீனியம்மாள் தம்பதி கைதானது. அதாவது, போன 2009-ம் ஆண்டு பாளையங்கோட்டையில் ஒரு பெட்டிக்கடையை கார்த்திகேயனும் சன்னியாசியும் சேர்ந்து தீவைத்து கொளுத்தி இருக்கிறார்கள். இது சம்பந்தமாக 2 பேரையும் போலீசார் பிடித்து பாளை ஜெயிலிலும் அடைத்தனர்.

advertisement by google

தேர்தல் வாய்ப்பு
அந்த சமயத்தில்தான் ஜெயிலில் கூலிப்படையைச் சேர்ந்த ஒருவருடன் தந்தை-மகனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதற்குபிறகு விடுதலையாகி வெளியே வந்ததும், அந்த கூலிப்படை நபரை கூப்பிட்டு சீனியம்மாள், சன்னாசி, கார்த்திகேயன் என குடும்பமே உட்கார்ந்து பேசி உள்ளனர். உமாமகேசுவரி உயிருடன் இருக்கிறவரை இருந்தால் தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்காது என்பதால், அவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டி உள்ளனர்.

advertisement by google

வாக்குமூலம்
இவ்வளவு விஷயங்களையும் சிபிசிபிஐ போலீசார் தெரிந்து கொண்டபிறகுதான், சீனியம்மாளையும் சன்னாசியையும் கைது செய்தனர். இப்போது, அவர்கள் சிபிசிஐடி ஆபீசுக்கு அழைத்து வரப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது. இதில் சன்னியாசி அளித்த வாக்குமூலத்தில் சொன்னதாவது:

சதித்திட்டம்
“உமாமகேசுவரி உயிருடன் இருந்தால் அரசியலில் நாங்கள் வளர முடியாது. அவர்தான் எங்களுக்கு தடையாக இருப்பார் என்று நினைத்தோம். அதனால்தான் கூலிப்படையை ஏவி கொலை செய்ய வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டினோம். ஆனால் கூலிப்படை மூலம் கொலை செய்தால் நாங்கள் போலீசில் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்துதான், மகன் கார்த்திகேயன் மூலம் கொலை செய்ய எண்ணினோம்.

ஜெயில்
அதன்படியே உமா மகேசுவரி, முருகசங்கரன், வேலைக்கார பெண் மாரியை கொன்றுவிட்டார். போலீசில் கார்த்திகேயன் சிக்கவும் இப்போது நாங்களம் சிக்கி கொண்டோம்” என்றார். இப்போது சன்னாசியை பாளை ஜெயிலிலும், திமுக பிரமுகர் சீனியம்மாள் கொக்கிரகுளத்தில் உள்ள மகளிர் ஜெயிலிலும் உள்ளனர்.

advertisement by google

Related Articles

Back to top button