ஆழ்துளை கிணற்றின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க காயல் அப்பாஸ் வலியுறுத்தல்
ஆழ்த்துளை கிணற்றின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !
ஜனநாயக மக்கள் எழுச்சி க ழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.
திருச்சி, மணப்பாறை அருகே நடுகாட்டு பட்டி என்கிற கிராமத்தை சேர்ந்த சிறுவன் சுஜித் ஆழ்த்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை உயிருடன் மீட்க தொடர்ந்து போராடி வரும் அமைச்சர்கள் மற்றும் தீயணைப்புனர்கள், காவல் துறையினர்கள் , பேரிடகுழுவினருக்கும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
சிறுவன் சுஜித்தின் சம்பவம் மக்களிடத்தில் மிகுந்த சோகத்தை ஆழ்த்தி உள்ளது. சிறுவன் சுஜித்துக்கு எந்த வித அசம்பாவிதமும் நடை பெறாமல் உயிருடன் திரும்ப வர இறைனிடம் பிராத்தனை செய்கின்றோம் . இது போண்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க தமிழக அரசு சிறப்பு கவணம் செலுத்தி உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது .
எனவே : சிறுவன் சுஜித்தை உயிருடன் மீட்க கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் ,இந்த ஆழ்த்துளை கிணற்றின் உரிமையாளர் மீது சட்டபடி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் , தமிழகத்தில் பயன் பெறாத ஆழ்த்துளை கிணறுகளை மூட உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்