குழந்தை சுர்ஜித் கையிலுள்ள வெப்பத்தை ரோபோ பதிவுசெய்துள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பதிவுசெய்துள்ளார்
திருச்சி:
குழந்தையின் கையிலுள்ள வெப்பத்தை உள்ளே சென்று ரோபோ கேமரா பதிவு செய்துள்ளது என்று சுர்ஜித் மீட்பு பணிகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில், பிரிட்டோ ஆரோக்கியராஜ் – கலா மேரியின் 2 வயது குழந்தை சுஜித் வில்சன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. அந்தக் குழந்தையை மீட்கும் பணி கடந்த 45 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குழந்தையின் கையில் வெப்பத்தை உள்ளே சென்று ரோபோ கேமரா பதிவு செய்துள்ளது என்று சுர்ஜித் மீட்பு பணிகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவிவித்துள்ளார்.
மீட்பு பணிகள் நடக்கும் இடத்திலேயே தொடர்ந்து தங்கியுள்ள அவர் அதுகுறித்து அளித்துள்ள தகவல்களாவது:
ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள குழந்தை சுர்ஜித் மீட்பு குறித்து முதல்வர் பழனிசாமி தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார்
தற்போது குழந்தை 88 அடியில் உள்ளதால் 90 அடி வரை ரிக் எந்திரங்களைக் கொண்டு தோண்ட திட்டமிட்டுள்ளோம். மீட்புப் பணி தொய்வின்றி நடக்கிறது. அதிர்வு ஏற்படுவதைத் தவிர்க்க கவனமுடன் குழி தோண்டப்பட்டு வருகிறது. குழந்தை அசைவற்று உள்ளது. நேற்று முதல் குழந்தையின் கையில் அசைவு தெரியவில்லை. ரோபோ கேமரா உள்ளே சென்று குழந்தையின் கையில் வெப்பத்தை பதிவு செய்தது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.