இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

குழந்தை சுர்ஜித்காக பிரபலங்களின் உருக்கம்

advertisement by google

42 மணி நேரமாக ஆழ்துளைக் கிணற்றில் சிக்கித் தவிக்கும் 2 வயது சிறுவன் சுர்ஜித்: பிரபலங்கள் உருக்கம்

advertisement by google

திருச்சி: திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி 42 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. தற்போது 82 அடியில் சிக்கி இருக்கும் சுஜித்தை, 110 அடியில் குழி தோண்டி, சுரங்கம் அமைத்து மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும் – சிறுவன் சுர்ஜித்தின் பெற்றோருக்கு அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் ஆறுதல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் சுஜித் மீண்டு வர வேண்டும் என உருக்கமாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.

advertisement by google

நடிகர் ரஜினி பேட்டி

advertisement by google

ஆழ்துளை கிணறுகள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். சுஜித் உயிருடன் மீண்டு வர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன். குழந்தைகளைப் பாதுகாப்பதில் பெற்றோர் கவனமுடன் இருக்க வேண்டும். அதிகாரிகள் தொடர்ந்து 36 மணி நேரத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். இதில் அதிகாரிகளையும், அரசையும் குறை கூறுவது தவறு.

advertisement by google

நடிகர் கமல் ட்விட்

advertisement by google

ஆழ்துளைக் கிணற்றில் பள்ளம் தெரியாமல் சிறு குழந்தைகள் விழுவது ஒரு தொடர் அவலமாக தமிழத்தில் இருக்கிறது. ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும் பணி வெற்றி பெற வேண்டும். ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் விடுவதைக் குற்றமாகவும், அதற்கு பெருந்தொகையை அபராதமாகவும் அரசு விதிக்க வேண்டும்.

advertisement by google

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்விட்

advertisement by google

 நானும் ஒரு குழந்தையோட தகப்பன் அந்த வகையில் என்னால சுர்ஜித் பெற்றோரின் வலியை உணர முடியுது. அந்தக் குழந்த உயிர் பொழச்சு வரணும். உன் தாய்ப்பால்ல வீரம் இருக்கு கண்ணு, நிச்சயம் வருவ நீ. தம்பி நீ வந்தாத் தான் எல்லாருக்கும் உண்மையான தீபாவளி. எழுந்து வா தங்கமே. வேதனையோடு ஒரு தீபாவளி.

கவிஞர் வைரமுத்து ட்விட்.

குழாயில் சிக்கியுள்ள குழந்தையை மீட்க நிலமிறங்கும் வீரர்களை வரவேற்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். குழாயில் சிக்கியுள்ள குழந்தையை மீட்க நிலமிறங்கும் வீரர்களை வாழ்த்தி கண்ணீரோடு கை தட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் விமல்

சுர்ஜித் மீண்டு வர வேண்டும் என அனைவருடன் சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன் என்று நடிகர் விமல் தெரிவித்துள்ளார். ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

advertisement by google

Related Articles

Back to top button