விண்மீண்அதிரடிஆல்ரவுண்ட்செய்திகள்?14?10?2019?
????விண்மீண்நியூஸ்????:திண்டுக்கல் மாவட்ட செய்திகள்♨
♨♨கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மழை: பழனி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பழனி,
♨♨பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் விவசாய ஆதாரமாக பாலாறு-பொருந்தலாறு அணை, வரதமாநதி அணை, குதிரையாறு அணை ஆகியவை உள்ளன. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மழை பெய்யும் காலங்களில் அணைகளுக்கு ஓடைகள் மூலம் நீர்வரத்து ஏற்படும். அந்த வகையில் கடந்த சில மாதங்களாக கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் அணைப் பகுதிகளில் நீர்வரத்து இன்றி நீர்மட்டமும் குறைந்து காணப்பட்டது. இதனால் விவசாய தேவைக்கு தண்ணீர் திறப்பது முற்றிலும் குறைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பழனி, பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி பகுதிகளின் குடிநீர் தேவைக்காக மட்டும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது பழனி பகுதியில் கடும் வெயில் நிலவி வந்தது. எனினும் கடந்த 2 நாட்களாக பழனி சுற்று வட்டார பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பழனி பகுதியில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அந்த வகையில் 66 அடி உயரம் கொண்ட வரதமாநதி அணையின் நீர்மட்டம் தற்போது 59.52 அடியாக உள்ளது. அணைக்கு 27 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 2 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் 80 அடி உயரம் கொண்ட குதிரையாறு அணையில் தற்போது 44.69 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 14 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை. 65 அடி உயரம் கொண்ட பாலாறு-பொருந்தலாறு அணையில் தற்போது 36.02 அடி வரை தண்ணீர் உள்ளது. அணைக்கு 180 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 5 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
♨♨ஊடகதளம்
[10/14, 4:36 PM] விண்மீண்நியூஸ்2: ♨♨ஐ.ஜி. முருகனுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு – வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
♨♨ஊடகதளம்
[10/14, 4:36 PM] விண்மீண்நியூஸ்2: ♨♨தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த தேர்தல் வழக்கை வாபஸ் பெற தமிழிசைக்கு அனுமதி.
♨♨”வழக்கு வாபஸ் குறித்து 10 நாட்களுக்குள் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட வேண்டும்”.
♨♨தமிழிசை தரப்புக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.
- தூத்துக்குடி தொகுதி வாக்காளர் சந்தானகுமார் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி கனிமொழி மனு
♨♨கனிமொழி மனு மீது 29-ம் தேதிக்குள் பதிலளிக்க சந்தானகுமாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
♨♨ஊடகதளம்
[10/14, 4:36 PM] விண்மீண்நியூஸ்2: ?REAKING NEWS
????நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் விசாரணை அறிக்கையை தேனி நீதிமன்றத்தில் தாக்கல்: சி.பி.சி.ஐ.டி. போலீஸ்
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் விசாரணை அறிக்கையை தேனி நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ளனர். விசாரணை அறிக்கையை நீதிபதி பன்னீர்செல்வத்திடம் தேனி சி.பி.சி.ஐ.டி. ஆய்வாளர் சித்ரா தேவி தாக்கல் செய்துள்ளார்.
[10/14, 4:36 PM] விண்மீண்நியூஸ்2: ♨♨ தமிழர்கள் விரும்புவது சொற்களைவிட செயல்களைத்தான்: தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்: வைரமுத்து
சென்னை: தமிழர்கள் விரும்புவது சொற்களைவிட செயல்களைத்தான் என்பதால் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் கவிஞர் வைரமுத்து பேட்டியளித்துள்ளார்.
♨♨ஊடகதளம்
[10/14, 4:36 PM] விண்மீண்நியூஸ்2: ♨♨ கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 8 செ.மீ. மழை: வானிலை ஆய்வு மையம்
சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 8 செ.மீ. மழை பொழிந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் 5 செ.மீ. மழையும், ஈரோடு, திருப்பூரி மாவட்டங்களில் சில இடங்களில் 4 செ.மீ. மழையும் பொழிந்துள்ளது.
♨♨ஊடகதளம்
[10/14, 4:36 PM] விண்மீண்நியூஸ்2: ♨♨ பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
புதுடெல்லி: இணைய வழி வர்த்தக நிறுவனங்கள் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதுதவிர, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையும், இணைய வர்த்தக நிறுவனங்கள், தங்கள் வணிகத்தில் பிளாஸ்டிக்குக்கு மாற்றாக வேறு பொருட்களை பயன்படுத்துவதை யோசிக்க வேண்டும். அதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் குறைக்கும் விதமாக மாற்று வழிமுறைகளை பரிசீலித்து வருகிறோம் என்று இணைய வர்த்தக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
♨♨ஊடகதளம்
[10/14, 4:36 PM] விண்மீண்நியூஸ்2: ♨♨ மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் நேற்று திருடப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் மீட்பு: ஒருவர் கைது
மதுரை: மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் நேற்று திருடப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டு ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். விக்கிரமங்கலத்தில் நேற்று பழமையான மதுரோதய ஈஸ்வரமுடையார், சிவனசேவல்லி ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டன.
♨♨ஊடகதளம்
[10/14, 4:36 PM] விண்மீண்நியூஸ்2: ♨♨ ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தமிழகத்தை சேர்ந்த 33 பேர் கைது
டெல்லி: ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தமிழகத்தை சேர்ந்த 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் 127 பேர் கைது செய்யப்பட்டதில் 33 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என என்ஐஏ ஐ.ஜி.அலோக் மிட்டல் தகவல் தெரிவித்துள்ளார்.
♨♨ஊடகதளம்
[10/14, 4:36 PM] விண்மீண்நியூஸ்2: ♨♨ வெள்ளகோவில் அருகே கொலை செய்து புதைக்கப்பட்ட செல்வராஜ், வசந்தாமணி ஆகியோரின் உடல்கள் தோண்டி எடுப்பு
திருப்பூர்: வெள்ளகோவில் அருகே கொலை செய்து புதைக்கப்பட்ட செல்வராஜ், வசந்தாமணி ஆகியோரின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. செல்வராஜின் சகோதரி கண்ணம்மாள் வீட்டு பின்புறம் புதைக்கப்பட்ட உடல்களை போலீஸ் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொலை தொடர்பாக கண்ணம்மாள், அவரது மகள் பூங்கொடி, மருமகன் நாகேந்திரன் மற்றும் இளங்கோ என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
♨♨ஊடகதளம்
[10/14, 4:36 PM] விண்மீண்நியூஸ்2: ♨♨ சமூக வலைத்தள கணக்குடன் ஆதார் எண் இணைக்க கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
டெல்லி: சமூக வலைத்தள கணக்குடன் ஆதார் எண் இணைக்க கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சமூக வலைத்தள கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க கோரும் சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுப்பியது.
♨♨ஊடகதளம்
[10/14, 4:36 PM] விண்மீண்நியூஸ்2: ♨♨ திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த சங்கீதா என்பவர் வைரல் காய்ச்சலால் உயிரிழப்பு
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த சங்கீதா என்பவர் வைரல் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சங்கீதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருத்தணி சுற்றுவட்டாரத்தில் கடந்த 4 நாட்களில் 3 பேர் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
♨♨ஊடகதளம்
[10/14, 4:36 PM] விண்மீண்நியூஸ்2: ♨♨ தமிழக ஐ.ஜி. மீதான பாலியல் வழக்கை தெலுங்கானா நீதிமன்றத்துனக்கு மாற்றியதற்கு தமிழக அரசு எதிர்ப்பு
சென்னை: தமிழக ஐ.ஜி. மீதான பாலியல் வழக்கை தெலுங்கானா நீதிமன்றத்துனக்கு மாற்றியதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அல்லது ஒய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்து புகாரை விசாரிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
♨♨ஊடகதளம்
[10/14, 4:36 PM] விண்மீண்நியூஸ்2: ♨♨காஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை
♨♨ஜம்மு-காஷ்மீர் முழுவதும் மீண்டும் போஸ்ட் பெய்டு செல்போன் சேவை தொடங்கியது
♨♨ஊடகதளம்
[10/14, 4:36 PM] விண்மீண்நியூஸ்2: ♨♨வாக்காளர் பட்டியலை சரிபார்க்க 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்.
♨♨நியமிக்கப்பட்ட 10 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை.
♨♨வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 25ம் தேதி வெளியிடப்படவுள்ள நிலையில் ஆலோசனை.
♨♨ஊடகதளம்
[10/14, 4:36 PM] விண்மீண்நியூஸ்2: ♨♨கரூர் : வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வாழ்வார்மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் காளியப்பன் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது.
♨♨ஊடகதளம்
[10/14, 4:36 PM] விண்மீண்நியூஸ்2: ♨♨ ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 2 தீவிரவாதிகள் கைது
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கந்தர்பால் பகுதியில் 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஏ.கே.47 துப்பாக்கிகளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
♨♨ஊடகதளம்
[10/14, 4:36 PM] விண்மீண்நியூஸ்2: ♨♨ திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் சரணடைந்த சுரேஷை திருச்சி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தினர்
திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் சரணடைந்த சுரேஷை திருச்சி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தினர். சுரேஷை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
♨♨ஊடகதளம்
[10/14, 4:36 PM] விண்மீண்நியூஸ்2: ♨♨ ஜம்மு காஷ்மீரில் 72 நாட்கள் கழித்து மீண்டும் போஸ்ட் பெய்டு செல்போன் சேவை தொடக்கம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அனைத்துப் பகுதிகளிலும் போஸ்ட் பெய்டு செல்போன் சேவை மீண்டும் தொடங்கியது. காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செயணு்யப்பட்டதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5 முதல் செல்போன், இணைய முடக்கப்பட்டிருந்தன. 72 நாட்கள் கழித்து மீண்டும் போஸ்ட் பெய்டு மொபைல் போன் சேவையை மீண்டும் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
♨♨ஊடகதளம்
[10/14, 4:36 PM] விண்மீண்நியூஸ்2: ♨♨ கல்வி உதவி நிதியாக 8 பேருக்கு ரூ.25,000 வீதம் ரூ.2 லட்சத்தை வழங்கினார் மு.க.ஸ்டாலின்
சென்னை: கல்வி உதவி நிதியாக 8 பேருக்கு ரூ.25,000 வீதம் ரூ.2 லட்சத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கலைஞர் கரணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோருக்கு மருத்துவம் மற்றும் கல்வி உதவி நீதி வழங்கப்பட்டு வருகிறது. 2013-ம் ஆண்டில் இருந்து இதுவரை ரூ.4 கோடியே 89 லட்சத்து 90,000 ரூபாய் அறக்கட்டளை மூலம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
♨♨ஊடகதளம்
[10/14, 4:36 PM] விண்மீண்நியூஸ்2: ♨♨சுரேஷூக்கு 7 நாள் போலீஸ் காவல்
♨♨லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் சுரேஷை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ்க்கு அனுமதி
♨♨சரணடைந்த சுரேஷை 15 நாள் விசாரிக்க தனிப்படை அனுமதி கேட்ட நிலையில் 7 நாள் அனுமதி அளித்தது திருச்சி நீதிமன்றம்
♨♨ஊடகதளம்
[10/14, 4:36 PM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்❇
நீதிபதியை அவதூறாக விமர்சித்த வழக்கில் துக்ளக் குருமூர்த்தி மன்னிப்பு கேட்க நீதிமன்றம் உத்தரவு
நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக குருமூர்த்தி ட்விட்டரில் பதிவிட நிபந்தனை விதித்து வழக்கிலிருந்து விடுவிப்பு
[10/14, 4:36 PM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்❇
ராஜீவ்காந்தி படுகொலை என்பது உலகையே உலுக்கிய சம்பவம். அரசியல், இனம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு மக்கள் வேதனைப்பட்டார்கள்.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கூட அதிர்ச்சி அடைந்து மறுத்தார். தங்களுக்கு இதில் சம்பந்தம் இல்லை என்று கூட கூறினார்.
தற்போது சீமான் பேசி இருக்கும் கருத்தை விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் கூட ஏற்க மாட்டார்கள். சீமானின் பேச்சு காங்கிரசாரை மட்டுமல்ல அனைத்து மக்களையும் காயப்படுத்தும். புண்படுத்தும்.
தேசத்தின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி இருக்கிறார். மிகவும் கண்டிக்கத்தக்க வக்கிரமான பேச்சு. யாரும் ஆதரிக்க மாட்டார்கள்.
அவர் மீது அரசு சட்ட ரீதியாக வழக்குப்பதிவு செய்து இருப்பது சரியான நடவடிக்கை. சீமான் தனது பேச்சை திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி கடுமையாக தண்டிக்க வேண்டும்.
காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் பேட்டி
[10/14, 4:36 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪தேனி அருகே கோடாங்கிப்பட்டியில் உள்ள ஈஸ்டர்ன் மசாலா தயாரிப்பு தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து
4 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்க போராட்டம்
[10/14, 4:36 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪#JUSTIN :
ராதாபுரம் தேர்தல் வழக்கில் அதிமுகவின் இன்பதுரை மனுவை விரைவாக விசாரிக்க கோரிய திமுகவின் அப்பாவு கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்
இன்பதுரை வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவை அறிவிக்க வரும் 23ம் தேதி வரை இடைக்கால தடை உள்ளது குறிப்பிடத்தக்கது
[10/14, 4:36 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪விஜயதசமி நாளன்று தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2,754 குழந்தைகள் எல்கேஜி, யுகேஜி, முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர் – கல்வித்துறை தகவல்.
அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 325 குழந்தைகள் சேர்ந்துள்ளனர் – கல்வித்துறை.
[10/14, 4:36 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪Uttarakhand: Superstar Rajinikanth at Swami Dayananda Ashram in Rishikesh, earlier today.
ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தா ஆசிரமத்தில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த்.
[10/14, 4:36 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪தமிழகத்தில் அமையவுள்ள 6 மருத்துவ கல்லூரிகளுக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்
புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்கும் போது வட மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளை மத்திய அரசு விரைந்து தொடங்க வேண்டும். – ராமதாஸ்
[10/14, 4:36 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது
வியாழக்கிழமை காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
[10/14, 4:36 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪#Breaking :
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் விளக்கம் கோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு
ஜாமீன் கோரி சிதம்பரம் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்களை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றது எப்படி?.
சிதம்பரம் தரப்பு வாதங்களை உயர்நீதிமன்றம் ஏற்றது குறித்து விளக்கம் தேவை – சிபிஐ
[10/14, 4:36 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪”அப்துல்கலாம் ஐயா பிறந்த நாளில் தளபதி/தல ரசிகர்கள் மரம் நட வேண்டும்.” – நடிகர் விவேக் கோரிக்கை.