இனிப்புக்கு 5% – காரத்துக்கு 12% GST – கம்ப்யூட்டரே கன்ஃபியூஸ் ஆகுது – நிதியமைச்சரை வெளுத்தெடுத்த கோவை தொழிலதிபர்
கோவை:கோவை கொடிசியாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஜிஎஸ்டி குறைப்பு தொடர்பாக பல்வேறு அமைப்பினரும் கருத்து தெரிவித்தனர்.இதையடுத்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 70 இடங்களில் சிட்பி வங்கிகளை நாங்கள் திறக்க உள்ளோம். 5 ஆண்டுகளுக்கு 1 கோடி இளைஞர்கள் தொழில் திறன் பயிற்சி பெற தொழில் நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. முத்ரா திட்டத்தில் வழங்கப்பட்ட ரூ.10 லட்சம் கடனை ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். முத்ரா திட்டத்தில் நாட்டில் 49.5 கோடி பேர் பலன் அடைந்துள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் 5.6 கோடி பேர் பயன் அடைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் மித்ரா பூங்கா விருதுநகரில் தொடங்கப்பட்டிருக்கிறது. 2028-க்குள் இந்த பூங்கா மூலம் 1 லட்சம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழில் முனைவோர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில்,