பிரதமர் ஜன்தன் யோஜனா திட்டம் இன்று அதாவது ஆகஸ்ட் 28-ம் தேதி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தத் திட்டம் ஆகஸ்ட் 28, 2014 அன்று மத்திய அரசின் பல நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் தொடங்கப்பட்டது. இதன் மூலம் நேரடிப் பலன் பரிமாற்றம் போன்ற திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த முடிந்தது. கோவிட்-19 மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் வழங்கப்படும் தொகையும் இந்தக் கணக்குகளுக்குத்தான் அனுப்பப்படுகிறது. பிரதமர் ஜன்தன் யோஜனா திட்டத்தின் 10 ஆண்டுகளை பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தியுள்ளார்.
2014ம் ஆண்டு தொடங்கப்பட்டது
2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி மத்திய அரசு பிரதமர் ஜன்தன் யோஜனா திட்டத்தைத் தொடங்கியது. இதில் பூஜ்ஜிய இருப்புடன் வங்கிக் கணக்கைத் திறக்க வசதி வழங்கப்பட்டது. அரசின் தகவலின்படி, இந்தத் திட்டத்தின் கீழ் 52.39 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் உள்ளனர். இந்தக் கணக்குகளில் மொத்த வைப்புத்தொகை ரூ.2.30 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
திட்டத்தின் நோக்கம் என்ன?
2014-ம் ஆண்டு சாமானிய மக்களை வங்கிச் சேவையுடன் இணைக்கும் நோக்கில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் பயனாளிகளுக்குச் சேமிப்புக் கணக்குகளைத் திறப்பது, அவர்களுக்குக் கடன் வழங்குவதை எளிதாக்குவது மற்றும் காப்பீடு மற்றும் ஓய்வூதிய வசதிகளை வழங்குவது ஆகியவை அடங்கும். இந்தத் திட்டத்தில் பல வசதிகள் வழங்கப்படுகின்றன.
சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வைக்கலாம்? லிமிட்டை மீறினால் வீட்டுக்கு நோட்டீஸ் வரும் உஷார்!!
ஜன்தன் Vs சேமிப்புக் கணக்கில் உள்ள வேறுபாடு
ஜன்தன் கணக்குக்கும் சாதாரண சேமிப்புக் கணக்குக்கும் சிறிய வித்தியாசம்தான் உள்ளது. சேமிப்புக் கணக்கில் குறைந்த தொகைக்குக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஜன்தன் கணக்கில் கூடுதல் வசதிகள் கிடைக்காது. ஆனால் பிரதமர் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு அதிகபட்ச வரம்பு மிகவும் குறைவு.
ஜன்தன் யோஜனா கணக்குதாரர்களுக்கான வசதிகள்