டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை மீண்டும் கைது செய்ய போகிறீர்களா? ED-யிடம் டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி
டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சிறையில் இருக்கும் அவரை சிபிஐ மேலும் கைது செய்துள்ளது. அமலாக்கத்துறை கைது செய்யப்பட்ட வழக்கில் டெல்லி விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. இந்த ஜாமினை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் முறையீடு செய்யப்பட்டது. அப்போது உயர் நீதிமன்றம் ஜாமினுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது.அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். அப்போது உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.இந்த நிலையில் விசாரணை நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு வழங்கிய ஜாமினை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது டெல்லி மாநில உயர் நீதிமன்ற நீதிபதி நீனா பன்சால்