இந்தியா

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

advertisement by google

மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களின் நலன் கருதி தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்திட வலியுறுத்தி இன்று (28-6-2024) சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை இணைத்து இது தொடர்பாக மாணவர்களின் நலன் கருதி தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்திட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

advertisement by google

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கவேண்டும் என்ற தமிழ்நாட்டின் தொடர்ச்சியான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன், தேசிய அளவில் இந்தத் தேர்வு முறையை ரத்து செய்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

advertisement by google

தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கை 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும். தனி நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை இருக்கக்கூடாது. இந்தத் தேர்வு முறை மாணவர்களுக்குத் தேவையற்ற கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது தமிழ்நாட்டினுடைய கருத்தாகும்.

advertisement by google

அந்த வகையில், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கவும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளவும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

advertisement by google

இதுதொடர்பான சட்டமுன்வடிவு ஜனாதிபதிக்கு ஒப்புதலுக்காக ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், இதுநாள் வரையில் அக்கோப்பு நிலுவையில் உள்ளது வருத்தமளிக்கிறது.

advertisement by google

இதற்கிடையே, சமீபத்தில் நடந்த நீட் தேர்வின்போது நடைபெற்ற முறைகேடுகள், நீட் தேர்விற்கெதிரான தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி உள்ளது. பல மாநிலங்களும் இந்தத் தேர்வு முறையை ரத்து செய்யவேண்டியதன் அவசியம் குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வரவேண்டும். இவ்விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி விரைந்து தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

advertisement by google

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரும் சட்டசபை தீர்மானத்தையும் பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி உள்ளார்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button