இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

மின்னும் மாமல்லபுரம் சீனஅதிபரைவரவேற்க

advertisement by google

♦அலங்கார விளக்குகளால் மின்னும் மாமல்லபுரம்

advertisement by google

?பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்பதற்காக, சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பழைய விமான நிலையத்தின் ஐந்தாம் எண் நுழைவு வாயில் அலங்கார தோரணங்களுடன் அழகுபடுத்தப்பட்டுள்ளது.

advertisement by google

?வாழை மரங்களும், கரும்புகளும் கலை அழகுடன் கட்டப்பட்டு, மலர்களால் மெருகூட்டப்பட்டுள்ளன. பழைய விமான நிலைய நுழைவு வாயிலின் எதிரே, ஏற்படுத்தப்பட்டுள்ள பூங்கா வண்ண விளக்குகளால் பொலிவூட்டப்பட்டு, இந்திய தேசிய மூவண்ணக் கொடியும், மக்கள் சீனத்தின் சிவப்புக் கொடியும் பறக்கின்றன.

advertisement by google

?சீன அதிபர் பயணிக்கவுள்ள சாலைகள் தூய்மைப்படுத்தப்பட்டு, வெள்ளை மற்றும் மஞ்சள் வண்ணம் பூசப்பட்டு, முக்கிய இடங்களில் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

advertisement by google

?சாலையோரங்களில், மரக்கன்றுகள், பூஞ்செடிகள் நடப்பட்டு, மின்கம்பங்களிலும், வெள்ளிநிற வர்ணங்கள் பூசப்பட்டுள்ளன. இதேபோல், மாமல்லபுரம் நுழைவு வாயிலில் பனை ஓலையால் அலங்கரிக்கப்பட்ட வரவேற்பு வளைவும், அர்ஜூனன்தபசு பகுதியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வளைவும், ஐந்துரத சாலையில் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட வளைவும், கடற்கரை கோவில் நுழைவு வாயிலில் மலர்களால் அலங்கார வளைவும் அமைக்கப்பட்டுள்ளன.

advertisement by google

?கடற்கரை கோவிலைச்சுற்றிலும் வண்ணவிளக்கு அலங்காரங்களும், கடற்கரைப்பகுதியில் 500 க்கும் மேற்பட்ட எல் ஈ டி விளக்குகளும் வைக்கப்பட்டு மாமல்லபுரம் ஜொலிக்கிறது.

advertisement by google

?தலைவர்கள் சந்திப்பையொட்டி ஏற்கனவே சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மாமல்லபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளி கல்லூரிகளுக்கும் வியாபார நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

advertisement by google

?மேலும் மாமல்லபுரம் மற்றும் ஈசிஆர் சாலையில் உள்ள திரையரங்களில் நாளை காட்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும், சனிக்கிழமையன்று ஈசிஆர் பகுதியில் மட்டும் திரையரங்கு காட்சி ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

♦winmeennews.com

advertisement by google

Related Articles

Back to top button