தமிழகம்

அதிமுக -வில் இணைந்தார் நடிகை காயத்ரி ரகுராம்

advertisement by google

பிரபல நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜக-வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், தமிழக பாஜக-வில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டிய அவர், பாஜக-விற்கு எதிரான கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து அதிமுக-வில் இணைத்துக் கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, என் குடும்பத்தினர் எப்போதும் அதிமுக-வினர் தான், நன்றியை மறக்க கூடாது என்பதற்காக அதிமுக-வில் இணைந்துள்ளேன் எனக் கூறினார்.பாஜக உடனான கூட்டணில் இருந்து அதிமுக விலகிய பிறகு, பாஜக-வை சேர்ந்த பலரும் அதிமுக-வில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது பாஜக-வில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், இன்று அதிமுக-வில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button