வரும் பாராளுமன்ற தேர்தலில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் கர்நாடகாவில் இருந்து, போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி உள்ளது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் ஜூலை 17ம் தேதி முடிவடைகிறது. இதனால் பார்லிமென்டிற்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்து எடுக்க, வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.
இந்த தேர்தலில் வென்று ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற, தேசிய ஜனநாயக கூட்டணி தயாராக உள்ளது. ஆனால் இந்த கூட்டணியை வீழ்த்த, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, ‘இண்டியா’ என்ற பெயரில், கூட்டணி அமைத்துள்ளன.
இதற்கிடையில் சமீபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தல்களில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பா.ஜ., அபார வெற்றி பெற்றது.
புதுமுகங்கள்
ஆச்சர்யம் அளிக்கும் வகையில், மூன்று மாநிலங்களிலும் புதிய முகங்களுக்கு, முதல்வர் பதவியை, பா.ஜ., மேலிடம் கொடுத்தது. இதுபோல லோக்சபா தேர்தலிலும், ‘இண்டியா’ கூட்டணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க, பா.ஜ., தயாராகி வருகிறது.
அதாவது மத்திய அமைச்சர்களை தொகுதி மாறி போட்டியிட வைத்து, அவர்களை வெற்றி பெற வைக்கும் திட்டம், பா.ஜ.,விடம் உள்ளது.
அதன்படி, மத்திய அமைச்சர்கள் சிலரை கர்நாடகாவில் களமிறக்க பா.ஜ., திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரு தெற்கு, பெங்களூரு மத்திய, பெங்களூரு வடக்கு என, மூன்று தொகுதிகள் உள்ளன. இந்த மூன்று தொகுதிகளிலும் தற்போது பா.ஜ., வசமே உள்ளது.
பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி.,யாக இருக்கும் தேஜஸ்வி சூர்யாவுக்கு, வரும் தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரு வடக்கு எம்.பி., சதானந்த கவுடா, தேர்தல் அரசியலில் இருந்து, ஓய்வு பெற போவதாக அறிவித்துவிட்டார். பெங்களூரு மத்திய எம்.பி., மோகனுக்கு மீண்டும் ‘சீட்’ கிடைப்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது.
அறிமுகம் ஆனவர்
இதனால் பெங்களூரு வடக்கு, மத்திய தொகுதிகளில் இருந்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிர்மலா சீதாராமன் கர்நாடகாவில் இருந்து, ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். அவரது வீடும் பெங்களூரில் உள்ளது.
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நாடு முழுவதும் நன்கு அறிமுகம் ஆனவர் என்பதால், அவரையும் பெங்களூரில் களமிறக்க பா.ஜ., மேலிடம் யோசித்து வருகிறது.
ராகுல், பிரியங்கா
இவர்கள் இருவரும் பெங்களூரில் போட்டியிட்டால், அவர்களை வைத்து, பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெற்றி பெறவும், பா.ஜ., திட்டமிட்டு உள்ளது.
இதுபோல காங்கிரசில் ராகுல், பிரியங்கா ஆகியோரும் கர்நாடகாவில் இருந்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில் இருந்து போட்டியிடும்படி ராகுலுக்கும், பிரியங்காவுக்கும் காங்கிரசார் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இந்திரா, ஒரு முறை சிக்கமகளூரில் இருந்தும், சோனியா ஒரு முறை பல்லாரியில் இருந்தும் வெற்றி பெற்றனர். இதனால் பாட்டி, அம்மா வழியில் ராகுல், பிரியங்காவும் கர்நாடகாவில் இருந்து போட்டியிடலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. யார், யார் எங்கிருந்து போட்டியிடுவர் என்பது, இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.