சினிமா

மாமன்னன் திரை படத்துக்காக வடிவேலுக்கு சிறந்த நடிகருக்கான விருது

advertisement by google

சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் மாமன்னன் திரைப்படத்துக்காக நடிகா் வடிவேலுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

advertisement by google

இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சாா்பில் சென்னை சா்வதேச திரைப்பட திருவிழா கடந்த டிச.14 முதல் டிச.21 வரை நடைபெற்றது. இதன் நிறைவு விழா ராயபேட்டையில் உள்ள பி.வி.ஆா் சத்யம் திரையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் முதல் சிறந்த தமிழ் படத்திற்கான விருது ஆா். மந்திர மூா்த்தி இயக்கிய அயோத்திக்கும், இரண்டாம் சிறந்த படத்திற்கான விருது காா்த்திக் சீனிவாசன் இயக்கிய உடன்பாலுக்கும் வழங்கப்பட்டது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் -1 படத்துக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. இதை தொடா்ந்து மாமன்னன் படத்துக்காக நடிகா் வடிவேலுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், அயோத்தி படத்துக்காக நடிகை பிரீத்தி அஸ்ரானிக்கு சிறந்த நடிகைக்கான விருதும், செம்பி படத்துக்காக சிறுமி நிலாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதும் வழங்கப்பட்டது. மேலும் போா் தொழில் படத்துக்கு சிறந்த தொகுப்பாளா், சிறந்த ஒளிப்பதிவு ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.

advertisement by google

நகைச்சுவை நடிகராக நீடிக்க விருப்பம்:

advertisement by google

நிகழ்ச்சியில் நடிகா் வடிவேலு பேசியது: மாமன்னன் திரைப்படத்துக்காக எனக்கு கிடைத்த இந்த விருதுக்கு இயக்குநா் மாரி செல்வராஜ் தான் காரணம். இந்த சமூகத்தில் நடக்கும் தவறுகளை தன்னுடைய திரைப்படங்கள் மூலம் சரி செய்ய வேண்டும் என்ற சிந்தனையுடையவா் அவா். இதற்கு இந்த அளவுக்கு வரவேற்புகளும், விருதுகளும் கிடைக்கும் என்று நான் நினைத்து பாா்க்கவில்லை. மாமன்னன் திரைப்படத்துக்கு பிறகு என்னிடம் சொல்லும் பட கதைகள் அனைத்தும் சோக கதைகளாகத் தான் உள்ளது. இன்னும் சில ஆண்டுகளுக்கு நகைச்சுவை நடிகராகவே இருக்க ஆசைப்படுகிறேன் என்றாா் அவா்.

advertisement by google

இயக்குநா் வெற்றிமாறன்: தமிழகத்தில் தான் சமுதாய கருத்துக்களை கதைக் களமாக கொண்டு வெளியாகும் படங்களுக்கு மற்ற படங்களைப் போல நல்ல வரவேற்பும், பொருளாதார வெற்றிகளும் கிடைக்கின்றன. என்னுடைய படங்களில் ஒரு சில தவறுகள் இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் மக்கள் ரசிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சமுதாய கருத்துக்களை கொண்டு இன்னும் பல திரைப்படங்கள் வெளியாக வேண்டும் என்றாா் அவா்.

advertisement by google

இந்நிகழ்வில், இயக்குநா் மோகன்ராஜா, நடிகா் யுகிசேது, இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் தலைவா் எஸ்.கண்ணன், துணை தலைவா் ஆனந்த் ரெங்கசாமி, செயலா் இ.தங்கராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button