சென்னை: பிக் பாஸ் முன்னாள் போட்டியாளராகவும் நடிகையாகவும் இருக்கும் வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரிவ்யூ செய்து வருகிறார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் வனிதாவை தாக்கிவிட்டு சென்றுவிட்டதாக வனிதா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
அதைத் தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட அநீதி குறித்து பிரதீப்பிடம் பேசும் போது அவர் சொன்ன வார்த்தை தன்னை கோபப்படுத்துகிறது என்று வனிதா பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வனிதா தன்னுடைய ரிவியூவை முடித்துவிட்டு தன்னுடைய சகோதரியின் வீட்டில் சாப்பிட்டு விட்டு கீழே காரை பார்க்கிங் செய்து இருந்த இடத்திற்கு வந்து கொண்டிருந்தபோது அங்கு ஒரு நபர் வனிதாவை பின்பக்கத்தில் இருந்து பிடித்து தள்ளி அவருடைய முகத்தில் அடித்து விட்டு ரெட் கார்டா கொடுக்குறீங்க? நீயும் உடந்தையா? என்ற வார்த்தைகளை சொல்லிவிட்டு மெண்டல் மாதிரி சிரித்துக் கொண்டே ஓடிவிட்டான் என்று தன்னுடைய புகைப்படத்தையும் வனிதா சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.
உடனே இந்த செய்தி காட்டு தீ போல பரவியது. அது மட்டுமல்லாமல் அந்த மர்மமானவர் ரெட் கார்டு பற்றி பேசி அடித்திருப்பதால் இது ஒருவேளை பிரதீப் உடைய ஆதரவாளராக இருக்கலாமா என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் வனிதா எந்த இடத்திலும் பிரதீப் தான் இதை செய்தார் என்று சொல்லவில்லை. இந்த நிலையில் வனிதா தன்னுடைய ரிவ்யூவில் பேசிக் கொண்டிருக்கும்போது தான் தாக்கப்பட்டது குறித்து பிரதீப்பிடம் போனில் மெசேஜ் மூலம் சாட் செய்து பேசினேன்.
அதில் பிரதீப் நான் எந்த இடத்திலும் உன்னை நேரடியாக புகார் கூறவில்லை. வந்தவர் ஒருவேளை உனக்கு ஆதரவாளர்களாக கூட இருக்கலாம் என்று தான் சொல்லி இருந்தேன் என்று கூறி, அதையும் மீறி நான் ஏதாவது இடத்தில் பேசியது உன்னை புண்படுத்தி இருந்தால் சாரி என்று மெசேஜ் செய்திருந்தேன்.
அதற்கு பிரதீப் பரவாயில்லை என்று சொன்னதோடு ஜோவிகாவை பற்றி வனிதாவிடம் பேசினாராம். அதில் ஜோவிகா சமீபகாலமாக நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறார் என்றும், நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள் அவள் கண்டிப்பாக ஜெயிப்பாள் என்றும் பிரதீப் கூறி இருக்கிறார். இதற்கு பதிலாக வனிதா நான் என்னை தாக்கியதை பற்றி அவனிடம் கூறினேன். ஆனால் அவன் ஏதோ என் மகள் விளையாட்டில் நான் சந்தேகப்படுவது போலவே என்னிடம் அவள் ஜெயிப்பாள் என்று கூறுகிறான்.