பக்திபயனுள்ள தகவல்

இந்த 4 பொருட்களை சிவப்பு துணியில் கட்டி வாசலில் தொங்க விடுங்க… வீட்டின் வறுமையும், துன்பமும் நீங்கும்…

advertisement by google

நாம் இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு உழைப்பது எல்லாமே நல்ல செல்வ செழிப்பான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கு தான். ஆனால் என்ன தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும், அதற்கான பலனான பணம், பொருள், செல்வம் என்று எதுவும் கிடைக்காமல் இருக்கும். இப்படி கிடைக்காமல் இருப்பதற்கு கிரகங்களின் நிலைகள் ஒருபுறம் காரணமாக இருந்தாலும், மற்றொரு புறம் கண் திருஷ்டியும் காரணமாக இருக்கலாம். கண் திருஷ்டி ஏற்பட்ட ஒருவரது வீட்டில் பணம் சேராமல் இருப்பதோடு, வீட்டிற்கு பணம் வரும் வேகத்திலேயே செலவாகிவிடும். மேலும் அந்த வீட்டில் உள்ளோர் கடன் பிரச்சனையால் அவதிப்பட நேரிடும். இப்படியான சூழ்நிலையை ஒருவர் தங்கள் வாழ்வில் அடிக்கடி சந்தித்தால், அந்நபர் மீது கண் திருஷ்டி ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

advertisement by google

நம்மைச் சுற்றி நல்லவர்கள் இருந்தாலும், கெட்ட எண்ணம் கொண்டவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். இப்படி கெட்ட எண்ணத்துடன் ஒருவர் வீட்டில் நுழைந்தால், அந்த வீட்டில் உள்ளோர் தங்கள் தொழிலில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. நம்மால் கெட்ட எண்ணம் கொண்டவர்களை எளிதில் கண்டறிய முடியாது. இத்தகைய சூழ்நிலையில் வீட்டின் கண் திருஷ்டி நீங்க வேண்டுமானால், அமாவாசை நாளில் ஒரு பரிகாரத்தை செய்யுங்கள். இதை செய்யும் போது கண் திருஷ்டி நீங்குவதோடு, வீட்டில் உள்ள கஷ்டங்களும் நீங்கும், வாழ்வின் முன்னேற்றமும் ஏற்படும். இப்போது அது என்ன பரிகாரம் என்பதைக் காண்போம்.

advertisement by google

அமாவாசை தான் சிறந்த நாள்

தீபாவளிக்கு மறுநாள் அமாவாசை. இந்த ஐப்பசி அமாவாசை நாளில் உங்கள் வீட்டின் கண் திருஷ்டி நீங்க வேண்டுமானால், வீட்டின் வாசலில் ஒரு சிவப்பு நிற கண் திருஷ்டி மூட்டையை கட்டிவிடுங்கள். இப்படி கட்டிவிடும் போது, வீட்டில் உள்ள கஷ்டங்கள் நீங்குவதோடு, வீட்டில் உள்ளோர் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். அதோடு வீடு எப்போதும் நேர்மறை ஆற்றல் நிரம்பியும் இருக்கும். இப்போது அந்த சிவப்பு மூட்டை என்னவென்பதைக் காண்போம்.

advertisement by google

கண் திருஷ்டியைப் போக்கும் சிவப்பு மூட்டை

வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஒரு சிவப்பு துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் நவதானியங்களை ஒரு கைப்பிடி வைத்து, அத்துடன் சோழி, கடுக்காய், வசம்பு ஆகியவற்றையும் வைத்து மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும். இந்த சிவப்பு நிற மூட்டையை வீட்டின் தலைவாசலுக்கு மேலே கட்டி விட வேண்டும்.

advertisement by google

நன்மைகள்

இந்த சிவப்பு நிற துணி மூட்டையில் வைக்கப்பட்டுள்ள சோழி, கடுக்காய், வசப்பு ஆகிய அனைத்துமே கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றலைப் போக்கும் திறனைக் கொண்டவை. மேலும் நவதானியங்கள் தெய்வ சக்தியைக் கொண்டிருப்பதோடு, தீய சக்தியை அழிக்கும். இப்படிப்பட்ட பொருட்களை ஒன்றாக ஒரு சிவப்பு துணி வைத்து மூட்டையாக கட்டி மனதில் குலதெய்வத்தை நினைத்து, அமாவாசை நாளில் வீட்டு வாசலில் கட்டும் போது, கண் திருஷ்டி நீங்குவதோடு, வீட்டில் உள்ள பிரச்சனைகளும் படிப்படியாக குறைந்து, வீட்டுச் சூழல் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

advertisement by google

எப்போது மாற்ற வேண்டும்?

இந்த சிவப்பு நிற மூட்டையை ஒவ்வொரு மாதமும் வரும அமாவாசை நாளில் மாற்றி விட வேண்டும். அப்படி மாற்றும் போது, கழற்றிய சிவப்பு மூட்டையை யாருடைய காலிலும் படாதவாறு நீரில் போடுங்கள். இப்படி தொடர்ந்து சில அமாவாசைகள் தொடர்ந்து செய்து வந்தால், வீட்டில் ஒரு நல்ல மாற்றத்தை நிச்சயம் காணலாம்.

advertisement by google

advertisement by google

advertisement by google

Related Articles

Back to top button