பக்திபயனுள்ள தகவல்

குல தெய்வமாக வணங்கப்பட்ட மூதேவி இப்போது, தரித்திரத்தின் அடையாளமாக மாறியது எப்படி?

advertisement by google

வீட்டில் ஸ்ரீதேவி தான் குடியிருக்க வேண்டும். மகாலட்சுமி தான் குடியிருக்க வேண்டும் மகாலட்சுமிக்கு மூத்தவளான இந்த மூதேவியை வீட்டை விட்டு விரட்டி அடிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் நம்முடைய எல்லோர் மனதிலும் இப்போது ஆழமாக பதிந்து இருக்கின்றது.

advertisement by google

இந்த மூத்த தாய், மூத்த தேவி, மூதேவியை பற்றி நாம் அறியாத சில சுவாரஸ்யமான வரலாற்று கதையை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

advertisement by google

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தஉலகத்தில் வாழ்ந்த மக்கள் யாரை கடவுளாக நினைத்து வழிபாடு செய்து வந்தார்கள். இந்த உலகத்தில் தோன்றிய முதல் கடவுள் யாராக இருக்கக்கூடும். என்ற பல தேடல்கள் இன்றளவும் இருந்து கொண்டுதான் வருகின்றது. ஆனால் அதற்கான விடையை யாரும் சரியாக கண்டுபிடிக்கவில்லை. இருப்பினும் ஆராய்ச்சியின் மூலம் கிடைக்கப்பட்ட சில தகவல்கள் உள்ளன.நம்முடைய மூத்த குடிமக்கள், இந்த மூதேவியை தங்களுடைய குல தெய்வமாக பாவித்து வழிபாடு செய்து வந்ததாக சில ஆராய்ச்சிக் குறிப்புகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தவ்வை, ஜேஷ்டா தேவி, காக்கை கொடியோள், மஹா நித்திரை,

advertisement by google

ஏக வேணி, தூம்ர காளி இப்படி பல தமிழ் பெயர்களால் அழைக்கப்பட்டவள் தான் இந்த மூதேவி.

advertisement by google

மூத்த தெய்வம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்தப் பெயர் காலப்போக்கில் மருவி மூதேவி என்ற பெயரை அடைந்துவிட்டது. ஸ்ரீதேவிக்கு மூத்த அக்கா தான் இந்த மூதேவி. இது பல பேருக்கு தெரிந்திருக்கும். ஆனால் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த பல்லவர்கள் இந்த மூத்த தேவியை குல தெய்வமாக நினைத்து வழிபாடு செய்து வந்துள்ளார்கள். பல்லவர்களுக்கு அடுத்து

advertisement by google

தமிழ்நாட்டை ஆண்ட சேர, சோழ அரசர்களும் இந்த மூத்த தேவிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வழிபாடு செய்து வந்தது சில கல்வெட்டு குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

advertisement by google

இதோடு மட்டும் இல்லைங்க, இந்த மூத்த தேவியை, அதாவது மூதேவியை தவ்வை என்ற பெயரில் ஔவையாரும் திருவள்ளுவரும் தங்களுடைய பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதையும் இந்த இடத்தில் நாம் நினைவுகூற வேண்டும்.

advertisement by google

ஸ்ரீதேவி மக்களுக்கு தேவையான செல்வத்தை கொடுப்பதற்குப் படைக்கப்பட்டதாகவும், மூதேவி வீட்டிலிருக்கும் வறுமையை அடித்து விரட்டுவதற்கு படைக்கப்பட்டதாகவும் நம் முன்னோர்களால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்டுள்ளது.உதாரணத்திற்கு ஒரு வீட்டில் இருப்பவர்கள் சோம்பேறித்தனமாக உள்ளார்கள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. இந்த வீட்டில் மூதேவி குடி இருப்பார்கள் என்பது நம் அனைவரது கருத்து. ஆனால் இப்படி சோம்பேறித்தனமாக கெட்ட எண்ணத்தோடு வாழ்பவர்களுடைய வீட்டில் மூதேவி குடியேறி,

அவர்களுக்கு வாழ்க்கையில் கஷ்டங்களைக் கொடுத்து, வாழ்க்கையில் எது நல்லது கெட்டது என்பதை புரிய வைத்து அந்த வீட்டிலிருக்கும் தரித்திரத்தை மூதேவி தன்னுடனே வெளியே எடுத்துச் சென்று விடுவாள். இந்த மூதேவி வெளியே சென்ற பிறகு, மூதேவியின் தங்கை ஸ்ரீதேவி அந்த வீட்டுக்குள் நுழைவாள்.

என்னைப்பார் யோகம் வரும் என்று எதற்காக கழுதை படத்தை மாட்டி வைத்துள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா. வேறு ஏதாவது விலங்கினத்தின் படத்தை மாட்டி வைத்திருக்கலாமே. மூதேவி அவர்கள் கழுதையின் மீது அமர்ந்து தான் வருவார்கள். இதனால்தான் இந்த கழுதை படத்தை எல்லோர் வீட்டிலும் மாட்டி வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.பொதி சுமப்பது தான் கழுதை. குறிப்பாக துணி வெளுப்பவர்கள் தான் இந்த கழுதையை, துணி பொதி சுமப்பதற்காக பயன்படுத்தி வருவார்கள். அழுக்கை, வெள்ளையாக்குவது தான் துணி வெளுப்பவர்களின் வேலை. இதே போல் தான் மனிதர்களின் மனதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யக்கூடிய வேலையை இந்த மூதேவி செய்கின்றாள்.ஆனால் காலப்போக்கில் மூதேவி என்ற பெயரைக் கேட்டாலே வீட்டில் தரித்திரம் பிடிக்கும், வறுமை வரும் என்ற எண்ணம் நமக்கு

வந்ததற்கு காரணம் தான் என்ன. நெற்கதிர்கள் ஸ்ரீதேவி என்றும் நெற்கதிர்கள் விளைவதற்கு கருப்பு நிறத்தில் உரமாக இருக்கக் கூடியதை மூதேவி என்றும் அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் சொல்லுவார்கள். அதாவது அழுக்கு படிந்த கருப்பான உரத்தை மூதேவிக்கு இணையாக சொன்னதால், மூதேவி அழுக்குப் படிந்த சுத்தம் இல்லாத ஒரு தெய்வம் என்று மக்களுடைய மனதில் பதிய தொடங்கியது.

காலப்போக்கில் அதுவே இந்த மூத்த தேவியை மூதேவி ஆக மாற்றுவதற்கு ஒரு காரணமாக அமைந்து விட்டது.மூத்த தேவியாக பட்டவள் என்றைக்குமே நமக்கு கஷ்டங்களை கொடுப்பவள் அல்ல. நம்மிடத்தில் இருக்கும் கெடுதலை நம்மிடத்தில் இருந்து வெளியே விரட்டி அடிப்பவள் என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்களா? இனி யாரையாவது பார்த்து மூதேவி என்று திட்டுவதற்கு முன் கட்டாயம் சிந்திப்பீர்கள்.

advertisement by google

Related Articles

Back to top button