Movie Release Today: சினிமா ரசிகர்களே.. இன்று மட்டும் 16 படங்கள் ரிலீஸ்.. என்னென்ன தெரியுமா?
நவம்பர் 24 ஆம் தேதியான இன்று மட்டும் தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளை சேர்த்து மொத்தம் 17 படங்கள் சினிமா ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது.
80ஸ் பில்டப்
குலேபகாவலி, ஜாக்பாட் படங்களை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்துள்ள படம் “80ஸ் பில்டப்”. இந்த படத்தில் சன் டிவியில் பிரபல சீரியலான பூவே உனக்காக தொடரில் நடித்த ராதிகா ப்ரீத்தி ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, முனீஸ்காந்த், மயில்சாமி, கூல் சுரேஷ் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார்.
ஜிப்ரான் இசையமைத்துள்ள 80ஸ் பில்டப் படமானது 1980கள் காலக்கட்டத்தில் சினிமா மீதான மோகம் கொண்ட ரசிகர்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
காதல் தி கோர்
தி கிரேட் இந்தியன் கிச்சன் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்ற ஜியோ பேபி, நடிகர் மம்மூட்டியை வைத்து “காதல் தி கோர்” என்ற படத்தை எடுத்துள்ளார். ஜோதிகா இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் இந்த படம் நேற்று (நவம்பர் 23) தியேட்டரில் வெளியாகி விட்டது. தன் பாலின உணர்வுகளை பற்றி
பேசும் காதல் தி கோர் படத்தை மம்மூட்டி சொந்தமாக தயாரித்துள்ளார்.
ஜோ
ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ, மாளவிகா மனோஜ், பவ்யா த்ரிகா, அன்பு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “ஜோ”. சித்துகுமார் இசையமைத்துள்ள இப்படம் தமிழ்நாட்டு பையனுக்கும், கேரளாவைச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையே நடக்கும் காதல் கலவரங்களை மையமாக கொண்டு
எடுக்கப்பட்டுள்ளது.
குய்கோ
இயக்குநர் அருள் செழியன் இயக்கத்தில் நடிகர்கள் விதார்த், யோகிபாபு ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் “குய்கோ”. அந்தோனி தாசன், கேவின் மிரண்டா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். சௌதிக்கு சென்று பணக்காரர் ஆகும் யோகிபாபு தன் தாயார் மரணத்துக்கு சொந்த ஊர் திரும்புகிறார். வந்த பார்த்தால் தாயின் உடல் காணாமல் போகிறது இதனைத் தொடர்ந்து என்ன நடக்கும் என்பதே இப்படத்தின் கதையாகும்.
சில நொடிகளில்
வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ‘சில நொடிகளில்’. இந்த படத்துக்கு மசாலா காபி, பிஜோர்ன் சுர்ராவ், தர்ஷனா கேடி, ஸ்டாக்காடோ, ரோஹித் மாட் உள்ளிட்ட 5 பேர் இசையமைத்துள்ளனர். மனைவிக்கு கணவர் செய்யும் துரோகத்துக்கு பாடம் கற்பிக்கும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லாக்கர்
ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்கியுள்ள படம் “லாக்கர்”. இப்படத்தை நாராயணன் செல்வம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் விக்னேஷ் சண்முகம், நிரஞ்சனி அசோகன், சுப்பிரமணியன் மாதவன், நிவாஸ் ஆதித்தன், தாஜ் பாபு ஆகியோர் நடித்துள்ளனர். வைகுந்த் ஸ்ரீனிவாசன் இசையமைத்துள்ளார். சட்ட விரோத செயல்களை செய்யும் ஒரு இளைஞன் வாழ்க்கையில் பெண் வந்தால் என்ன நடக்கும் என்பதை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
Nepolean (ஹாலிவுட்)
ஹாலிவுட்டில் ஜாக்குன் போனிக்ஸ், வேசன்னெ கிர்பி, யூசூப் கெக்கோர், மேத்யூ நீதம் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் நெப்போலியன் (Nepolean). ரிட்லி ஸ்காட் இயக்கியுள்ள இப்படம் சுமார் 200 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. வரலாற்றை மையப்படுத்திய இப்படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய அளவில் பிரமாண்டத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலே குறிப்பிட்டப்பட்ட முக்கிய படங்களை தவிர்த்துஅழகாய் பூக்குதே (தமிழ்), wish (ஹாலிவுட்), ஃபெர்ரே (இந்தி), கொடபொம்மலி பிஎஸ் (தெலுங்கு), ஆதிகேசவா (தெலுங்கு), ஸ்டார் ஃபிஷ் (இந்தி), தி ட்ரையல் (தெலுங்கு), ஆட்ரிஷய ஜலகங்கள் (மலையாளம்), ஜிம்மா 2 (மராத்தி), பெர்ஃப்யூம் (தெலுங்கு) என அனைத்து மொழிகளையும் சேர்த்து 17 படங்கள் ரிலீசாகியுள்ளது.