கோவில்பட்டி வடக்கு திட்டங்குளம், பூட்டிய வீட்டில் கொலையில் திடீர் திருப்பம் – 3 பவுன் நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டாரா?அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக இந்த கொலை நடைபெற்றதா ? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை?


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளம் பூந்தோட்ட காலனி பகுதியை சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது65). இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குருசாமி இறந்துவிட்டதால் முத்துலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கொலை இந்நிலையில் நேற்று முத்துலட்சுமியின் உறவினருக்கு திருமணம் நடந்தது. ஆனால் ஆனால் அவர் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி பார்த்தனர். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காததால் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து பார்த்தனர். அப்போது வீட்டின் பின்வாசலில் முத்துலட்சுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நகைகள் கொள்ளை முத்துலட்சுமி கழுத்தில் வெட்டப்பட்டும், 2 விரல்கள் வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டிருந்தார். அவரது கழுத்தில் அணிந்தி ருந்த 3 பவுன் நகை, அவர் விரலில் அணிந்திருந்த மோதிரம் திருடப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. எனவே நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக இந்த கொலை நடைபெற்றதா ? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பக்கத்து வீடுகளிலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கொண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.