முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் விண்ணப்ப படிவம்?விண்ணப்பிப்பது எப்படி?என்னென்ன சான்றுகள் தேவை?விண்ணப்ப படிவம் டவுன்லோடு செய்ய:?எங்கே விண்ணப்பிப்பது?


முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக கட்டணமில்லாமல் வழங்குவதற்காகவும், அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசால் தொடங்கப்பட்டு, யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டம் அனைத்து மக்களுக்கும் உலகத்தரத்தில் மருத்துவ சேவை வழங்கப்படும். இத்திட்டத்தினால் சுமார் 1.57 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர். இந்த திட்டத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1027 சிகிச்சை முறைகளுக்கும், 154 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 38 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செய்யபட்டுள்ளது. இந்த திட்டம் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் பயன் பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் விண்ணப்ப படிவம்
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் விண்ணப்ப படிவம்
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து உங்கள் பகுதி விஏஓ விடம் கையெழுத்து பெற்று உங்கள் பகுதி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அலுவலகத்தில் கொடுத்து அங்கு புகைபடம் எடுத்து கொள்ளுங்கள் அவ்வளவுதான் . இரண்டு தினங்களுக்குள் உங்கள் மருத்துவ காப்பிடு திட்ட கார்டு ரெடி
என்னென்ன சான்றுகள் தேவை?
குடும்ப அட்டை
ஆதார் அட்டை
கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்று பெற்று குடும்ப அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கும் மையத்திற்கு சென்று, விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: கட்டணமில்லாத் தொலைபேசி எண்- 1800 425 3993 ( 24 மணி நேரமும் செயல்படும்)
விண்ணப்ப படிவம்:- விண்ணப்ப படிவம் டவுன்லோடு செய்ய:-
மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பெற தகுதிகள்:
இத்திட்டத்தின் பயனைப் பெற ஒரு குடும்பத்தின் ஆண்டு வருவானம் 72,000 ரூபாய்க்குக் கீழே இருக்க வேண்டும். தேவையான ஆவணங்கள் வருமானச் சான்றிதழ் குடும்ப அட்டையின் நகல் , குடும்ப உறுப்பினர்களின் ஆதார் நகல்
எங்கே விண்ணப்பிப்பது?
ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலும் காப்பீட்டுத் திட்ட மையம் இயங்கி வருகிறது.
அங்கு சென்று விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களைக் கொடுக்கவும்,
பின்னர் அவர்கள் சொல்லும் தேதியில் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும்.
இதன் பின்பு அலுவலகத்தின் அதிகாரி ” Acknowledgement Receipts” தருவார். பின் ஓரிரு நாட்களில் மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்படும்.
பயனை எப்படி பெறுவது?
இத்திட்டத்தின் படி ஒரு குடும்பம் ஒரு ஆண்டிற்கு ரூ.5,00,000/- வரை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். சிகிச்சைக்கான மருத்துவ பட்டியல் இந்த https://www.cmchistn.com/features_ta.php வலைதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் பதிவு பெற்ற தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்பெற முடியும்.
காப்பீடு அட்டை தொலைந்து போனால்:-
காப்பீட்டு அட்டை தொலைந்து போனால் எதிர்பாரத விதமாக நீங்கள் ஏற்கனவே எடுத்த காப்பீட்டு திட்டத்தின் அடையாள அட்டை தொலைந்து விட்டாலோ அல்லது அட்டை உடைந்து விட்டாலோ கவலை வேண்டும். மிக எளிதாக காப்பீட்டு அடையாள அட்டையை இணையதளம் மூலமாக எடுக்கலாம்.
முதலில் இந்த லின்ங்கை கிளிக் செய்து https://www.cmchistn.com/. இந்த உங்கள் குடும்ப அட்டையின் எண்ணை பதிவு செய்து சர்ச் செய்தால் போதும் அடுத்து அதில் உங்கள் காப்பீட்டு எண் மற்றும் குடும்ப தலைவர் , உறுப்பினர்கள் பெயர்கள் இடம் பெறும். இதை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து கொள்லலாம
மேலதிக விவரங்களுக்கு:-
இத்திட்டம் பற்றிய விவரங்களை அறிவதற்கும் குறைகளை தொிவிப்பதற்கும் 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை தொலைபேசி எண் 1800 425 3993 மூலம் தொடர்பு கொள்ளலாம்.

