தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர். செ.ராஜூ தொடங்கி வைத்த இலவச கண் பரிசோதனை முகாம்

advertisement by google

கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர். செ.ராஜூ தொடங்கி வைத்த இலவச கண் பரிசோதனை முகாம்.

advertisement by google

கோவில்பட்டி புத்துயிர் இரத்ததானக் கழகம், தாமஸ்நகர் தொழிலாளர் விடுதலை முன்னணி, P.S. பால்ராஜ் பொதுசேவை அறக்கட்டளை, சங்கரா கண் மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச்சங்கம் ஆகியவற்றின் சார்பாக தாமஸ்நகர் ஜெயம் கம்ப்யூட்டர் அலுவலகத்தில் இலவச கண்பரிசோதனை முகாம் நடைபெற்றது.

advertisement by google

முகாமிற்கு தொழிலாளர் விடுதலை முன்னணி தலைவர் ஈஸ்வரவளவன் தலைமை வகித்தார், செயலாளர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். முகாமை முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர். செ.ராஜூ தொடங்கி வைத்தார்.

advertisement by google

விழாவில் புத்துயிர் இரத்ததானக் கழகத்தின் க.தமிழரசன், தொழிலதிபர் முத்துக்கனி, கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு நிர்வாகி முனைவர். சம்பத்குமார், பால்ராஜ் பொதுச்சேவை அறக்கட்டளை சுப்பையா பா.அம்பேத்கர், மதுஶ்ரீ இஞ்சினியரிங் முனியசாமி, தர்மம் வெல்லும் மக்கள் நல அறக்கட்டளையின் பூலோகப்பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்

advertisement by google

முகாமில் ஆவல்நத்தம் லட்சுமணன், தமிழ்நாடு காமராஜ் பேரவையின் நாஞ்சில் குமார், மக்கள் நீதிமய்யம் ராதாகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பழனிச்சாமி, நகர்மன்ற உறுப்பினர் செண்பகமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

advertisement by google

முகாமை கண் மருத்துவர் ராஜேஸ்வரி மற்றும் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் குழுவினர் 80க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கண்பரிசோதனை செய்தனர். மேற்சிகிச்சைக்காக 20பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button