திருவள்ளூர் அடுத்த சித்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்வா. இவர் தனது வீட்டில் லவ் பேர்ட்ஸ் பறவைகளை கூண்டில் வைத்து ஆசையாக வளர்த்து வந்தார்.அந்த கூண்டை வீட்டு முன்பு உள்ள சுவற்றில் வைத்து இருந்தார்.இந்தநிலையில் இன்று அதிகாலை வீட்டின் முன்புறம் இருந்த லவ் பேர்ட்ஸ் பறவைகளின் கூண்டிற்குள் குறுகிய இரும்பு கம்பிகளுக்கு இடையே புகுந்து நல்லபாம்பு ஒன்று நுழைந்தது.அந்த பாம்பு லவ் பேர்ட்ஸ் பறவையை உயிருடன் விழுங்கியது. ஒருபறவையை விழுங்கிய பின்னர் அந்த பாம்பு மற்றொரு பறவையை பிடிக்க முயன்றபோது கத்தத்தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்த ஜோஸ்வா வெளியே வந்து பார்த்த போது லவ் பேர்ட்ஸ் கூண்டுக்குள் நல்லபாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உயிருடன் இருந்த மற்றொரு லவ் பேர்ட்ஸ் பறவயை பத்திரமாக மீட்டார். லவ் பேர்ட்சை விழுங்கியதால் பாம்பின் உடல் பெருத்து விட்டது.இதனால் கூண்டின் சிறியகம்பிகளுக்கு இடையே புகுந்து நல்ல பாம்பால் வெளியேவர முடியாமல் சிக்கி இருப்பது தெரிந்தது. பின்னர் அந்த பாம்பையும் மீட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இதனால் லவ் பேர்ட்சை ருசித்த மகிழ்ச்சியில் நல்ல பாம்பு தப்பித்தோம் என்று அங்கிருந்து பாய்ந்து சென்றது. ஆனால் தனது ஜோடியை பறிகொடுத்த மற்றொரு லவ்பேர்ட்ஸ் கத்தியபடி பயத்தில் காணப்பட்டது.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google